Step into an infinite world of stories
சிறு வயது முதலே தந்தையின் பிடிவாதத்தில், அவரின் விருப்பத்துக்கு இணங்கி அனைத்தையும் செய்யும் முகிலன், தன் திருமணமாவது அதில் இருந்து மாறுபட்டு, அவரது விருப்பத்துக்கு இல்லாமல், தன் விருப்பத்துக்கு அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றான். ஆனால், திருமண விஷயத்திலும் அவனது தந்தையின் பிடிவாதமே வெல்ல, அவரின் கோபத்துக்கு கட்டுப்பட்டு, தாயின் கெஞ்சலுக்கு இணங்கி வளர்மதியை திருமணம் செய்துகொள்ள, அவளைத் திருமணம் செய்துகொண்ட பிறகே அவளது வயதைப் பற்றி அறிந்து கொள்கிறான்.
அவளுமே தன்னைப்போல் பெற்றவர்களின் சொல்லுக்கிணங்கி திருமணம் செய்து கொண்டுள்ளாள் என்பது புரிய, அவளுக்கு உலகம் புரியவந்த பிறகே அவளுடனான வாழ்க்கையை துவங்குவது என்ற முடிவில் இருக்கின்றான்.
அதை செயல்படுத்துகையில், அவரது பெற்றவரிடமிருந்து கிளம்பும் எதிர்ப்பு, வளர்மதியின் அறியாமை, இவை அனைத்தையும் எப்படி கடந்து அவளுடனான தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான் என்பதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Release date
Ebook: 28 March 2022
English
India