ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பொதுவாக ஒவ்வொரு எழுத்தாளரும் மர்மக் கதை, குடும்பக் கதை, ஆவி, நகைச்சுவை என எதாவதொன்றை தன் பாணியாக்கிக் கொண்டு அதையே தொடருவர்.
ஆனால் நண்பர் மோகன்தாஸ் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றிலும் ஜொலிக்கிறார். இவர் இன்னும் தொடாதது சரித்திர நாவல்கள்தான். அதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார் என கேள்வி.
ஒரு திறமையான எழுத்தாளரை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று, நான் ஆசிரியராக இருந்த ‘நாரதரில்’மோகன்தாஸின் முதல் தொடர்கதையை வெளியிட்டேன், அதற்கு அமோக வரவேற்பும் கிடைத்தது.
நான் பத்திரிக்கைகள் அனைத்தையும் விடாமல் படிப்பவன். ‘இனியவளே’...யை தொடராகவே படித்து வந்தேன். சின்னச் சின்ன புத்திசாலித்தனங்கள், நகைச்சுவை வர்ணனைகள் (உதாரணத்திற்கு – ‘இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு’என எழுதப்பட்ட தண்ணீர் லாரி ரோடில் நீரை இரைத்தபடி ஓடிற்று!), ஆழமான உணர்ச்சி கொந்தளிப்புகள் - என இதில் பெண்களின் ஒட்டு மொத்த ஓட்டுக்களையும் திருடியிருக்கிறார். (ஓட்டு என்றதும் திருட்டு என்று தான் வர்ணிக்க வருகிறது.) மன்னிக்கவும் - வாங்கியிருக்கிறார். இல்லையில்லை - பெற்றிருக்கிறார். கதையின் முடிவு கதைதானே என்கிற அளவில் ஓக்கே.
ஊரில் எந்த ஒரு பெண்ணும் இத்தனை பெருந்தன்மையோடு (இளிச்சவாய்தனத்தோடு) இருப்பதாகத் தெரியவில்லை. மற்றபடி திருப்தியே.
இவர் மென்மேலும் புத்தகங்கள் பல எழுதி அனைத்திற்கும் நானே முன்னுரை, பதவுரை, பொழிப்புரை தர இறைவனை வேண்டுகிறேன்.
If God be with us, who can be against us!
என்றும் அன்புடன் –
எஸ்.வி.சேகர்
วันเปิดตัว
อีบุ๊ก: 18 พฤษภาคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
