ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தாமரை இலைத் தண்ணீரைப் போல இவ்வுலக வாழ்க்கை சஞ்சலம் நிறைந்தது. நம் உயிர் நிலையற்றது. உலகம் அனைத்தும் வியாதி, அகங்காரம் இவைகளுக்கு ஆளாகியதென்றும்; சோகத்தால் பீடிக்கப்பட்டதென்றும் நீ உணர்ந்து இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து விடுபட கோவிந்தனை தியானிப்பாயாக - என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கரர், தன் பஜகோவிந்தத்தில். நான் சாதாரணப் பெண். பெரிய தத்துவத்தையோ, இல்லை உலகத்துக்கு இதுநாள் தெரியாத உண்மையையோ 'நண்டு' மூலம் எடுத்துரைக்க முன்வரவில்லை என்றாலும் ஒரே ஒரு உண்மையை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நண்டு ஒரு நிஜக்கதை.
சீதா, ராம்குமார் வாழ்ந்து, அழிந்து நான் கண்டிருக்கிறேன்.
அவர்களின் வேதனையை நான் அறிந்து, புரிந்து கொண்டதின் விளைவே நீங்கள் படிக்கப்போகும் இந்த நண்டு கதை.
இந்தப் புத்தகத்தை அந்தக் குடும்பத்தினருக்கு சமர்ப்பணம் செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்.
சிவசங்கரி
วันเปิดตัว
อีบุ๊ก: 6 เมษายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
