Step into an infinite world of stories
Romance
தனியொரு மனுஷியாகப் போராடித் தனக்கான இடத்தையும், வெற்றியையும் பெற்றிருக்கிற சிலருள் ஒருவராக சிறந்த எடுத்துக்காட்டாய் இலங்குகிறார் திருமதி கிரிஜா ராகவன் அவர்கள்.
தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைவான (ஆனால் எவருக்கும் சற்றும் குறையாத) பெண் பத்திரிகையாளர்களில் ஒருவராகத் திகழ்கிறவர் இவர். 1997ல் “லேடீஸ் ஸ்பெஷல்” என்ற மாத இதழை தனது நிறுவனம் வாயிலாக வெளியிடத் தொடங்கினார். இந்த மாத இதழும், இயக்கமும் பெரும் புகழ் வாய்ந்தவை, பெருமைக்குரியவை. ஊடகப் பிரமுகரான திருமதி கிரிஜா ராகவன் எழுத்தாளர், இதழாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், வெற்றிக்கரமான வணிகத் திறன்மிக்கவர், நல்ல பேச்சாளர், பயிற்றுவிப்பாளர், நூல்கள் பதிப்பாளர், நிர்வாகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஊடகம் மற்றும் விளம்பரம் குறித்த ஆலோசகர், விளம்பரபடத் தயாரிப்பாளர். வாழ்வியல் ஆலோசகர், குடும்பவியல் வழி நடத்துநர் இப்படி எண்ணற்ற முகங்கள் இவருக்கு உண்டு.
இதழ் நடத்துவதோடு மட்டும் நின்றுவிடாமல் பெண்கள் முன்னேற்றத்துக்கான கருத்தரங்கங்கள், நேர்காணல்கள், புதிய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள், பெண்கள் நடத்தும் நிறுவனங்களின் தயாரிப்புகளின் கண்காட்சிகள் ஆகியவற்றை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடத்துகிறார். சுய உதவிக் குழுக்களுக்காக இதுபோன்ற கண்காட்சிகளை நடத்த அரசு நிறுவனமான நபார்டு (வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி) போன்ற அமைப்புகள் இவரைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பது சிறப்பான செய்தி.
திருமதி கிரிஜா ராகவன் அவர்கள் விளம்பரத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்றவர். பல்வேறு வணிக நிறுவனங்கள் இவரிடம் தமது சேவை மற்றும் தயாரிப்புகளுக்கான விளம்பர ஆலோசனைகளைப் பெறுகிறார்கள். நிறுவனத் தயாரிப்புகளின் அறிமுகம், விளம்பரம், விற்பனை யுக்தி போன்ற வணிகத் தேவைகளில் ஆலோசனை வழங்குகிறார்.
வணிகம் தொடர்பான யுத்திகளுக்கு மட்டுமல்ல, பல்வேறு நிறுவன ஊழியர்களின் ஆளுமை வளர்ச்சி, தகவல் பரிமாற்றத் திறன் மனித உறவுகள், நேர நிர்வாகம், தலைமைப் பண்பு குறித்த எதிர்பார்ப்புகளின் மேம்பாட்டுக்கும் பயிற்சியளிக்கிறார். மகளிர் கல்லூரிகளும் மாணவிகளின் தொழிற்திறன். நுண்கலைத்திறன் போன்றவற்றை வளர்க்கும் பணிகளை இவரிடம் ஒப்படைத்துள்ளன. நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்வது. தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வது. இலக்கு குறித்துக் கொள்வது போன்ற பல தலைப்புகளில் பயிற்சியளிக்கிறார். புதுமையான வேலைகளுக்கும், நுண்கலைகளுக்கும், படைப்பாற்றல் மிக்க தகவல் பரிமாற்றத்திற்கும் திருமதி கிரிஜா ராகவன் புகழ் மிக்கவர்.
சளைக்காமலும், சலித்துக் கொள்ளாமலும் உழைத்து ஒவ்வொரு முயற்சியிலும் முயன்றும், தோற்றும், மனம் சோறாமல் எழுந்தும், இயங்கியும் இன்று தலைநிமிர்ந்திருக்கிற, தன்னையே தான் செதுக்கிக் கொண்ட சிறந்த சாதனையாளர் அவர். அவருக்கே ஆயிரம் கவலைகள் உண்டு. சோதனைகள் உண்டு, எனினும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மற்ற பெண்களுக்கு அபயமாகவும், ஆறுதலாகவும் விளங்குவதோடு அவர்கள் உய்யவும், உயரவும் வழிகாட்டும் உன்னதமான தலைவியாக விளங்குகிறார். இயல்பான பேச்சு, இதமான புன்னகை, கனிவு கலந்த கண்டிப்பு, காலம் தவறாமை, நேர்த்தி, சரியான முடிவெடுத்தல், தோல்விகளில் சோராமை, இலக்கை நோக்கிய திட்டமிட்ட பயணம், ஓய்வின்மை, எழுத்தாற்றல், பேச்சாற்றால் இன்னும் ஆச்சரியப் பட வைக்கின்ற பல குணங்களுக்கு சொந்தக்காரர். தலைவியாய், சகோதரியாய் , நண்பியாய் , தாயாய் இப்படி வித விதமான உறவுகளாய் இவரைக் கொண்டாடும் பெண்கள் அனேகம். உதவி என்று வருகிற எந்தப் பெண்ணுக்கும் உதவுகிற கரங்களும், உருகுகிற நெஞ்சமும் கொண்டவர். பணவுதவி மட்டுமல்ல, படிக்க உதவி மட்டுமல்ல, குடும்பப் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கிற சகோதரிகளுக்கு ஆறுதலாக இருப்பதோடு ஆலோசனைகள் கூறியும் துயர் களைகிறார்.
அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சீனா, ஸ்ரீலங்கா, மலேசியா, குவைத் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். கர்வமில்லாத கம்பீரமான பெண்மணி, கவலைகள் இருந்தாலும் கரைந்து போகாத காட்டிக் கொள்ளாத உறுதி, ஆழமான அமைதியான ஞானம், சாதிக்கவே பிறந்திருக்கிறோம் என்கிற சிந்தனையைச் சிதறவிடாமை, சாதித்த நிமிர்தலோடு நிதானம் இவை எல்லாம் ஒன்று சேர்ந்தவர்தான் திருமதி கிரிஜா ராகவன்.
Rtn.Girija Raghavan,
GAYATHRI PUBLICATIONS
60/9,LKS Nest,7th Avenue,
Ashok Nagar,Chennai 600 083
Editor &Publisher,Ladies Special,
www.ladiesspecial.com
Release date
Ebook: August 3, 2020
Listen and read without limits
800 000+ stories in 40 languages
Kids Mode (child-safe environment)
Cancel anytime
Listen and read as much as you want
1 account
Unlimited Access
Offline Mode
Kids Mode
Cancel anytime
English
International