Step into an infinite world of stories
Fiction
கோவை மாநகருக்கு அருகில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வெள்ளலூர் ஆதித் சக்திவேல் அவர்களின் சொந்த ஊர்.வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் அரசு கலைக் கல்லூரிகளில் 36 ஆண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். முழு ஈடுபாட்டோடு 2015 முதல் கவிதைகள் புனைந்து வரும் இவர் முதலவதாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பு “நொய்யலின் நினைவுகள்” .சூழலியல்,விழிப்புணர்வு,உலக நிகழ்வுகள்,சமூக நீதி ,தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு முற்போக்குக் கவிதைகள் படைத்து வருகிறார்.
இது வரை “நொய்யலின் நினைவுகள்”,”தாழப் பறந்த விமானம்”,”கங்கையாய் மாறிய கிணறு”, “நொய்யலின் கண்ணீர்” ஆகிய நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். தற்போது “எங்கே என் மழைக் காடுகள்?”என்னும் கவிதைத் தொகுப்பைத் தன் அய்ந்தாவது தொகுப்பாக வெளியிடுகிறார்.
“எங்கே என் மழைக் காடுகள்?” ஒரு மாறுபட்ட கவிதைத் தொகுப்பாகும்.இத்தொகுதியில் அமைந்துள்ள கவிதைகள் வழக்கத்திற்கு மாறாகச் சற்று நீளமானவை.ஒவ்வொரு கவிதையுமே தன்னுள் ஒரு சிறு கதையைக் கருவாகக் கொண்டுள்ளது.
கேரளத்தின் தெய்யம் என்ற நடனத்தை மையமாகக் கொண்டு எழுதப் பட்ட, காடுகள் அழிப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் சூழலியல் கவிதையான “எங்கே என் மழைக் காடுகள்?” என்னும் கவிதையில் தொடங்குகிறது இக்கவிதைத் தொகுப்பு .இக்கவிதையின் தலைப்பே கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளின் பின்னணியில் பின்னப்பட்ட, விழிப்புணர்வை ஏற்படுத்திக் காதலின் போலித்தனத்தை, ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்தில் வளரும் குழந்தைகளின் ஏக்கத்தை, செங்கல் சூளைத் தொழிலாளிகளான ஏழை அப்பா- அம்மாவின் கனவுகளை நனவாக்க உறுதி எடுக்கும் கல்லூரி செல்லும் ஒரு மகனது(மாணவனது) உணர்வுகளை , கணவன் -மனைவி-வேலைக்காரி ஆகிய மூவரின் மெல்லிய உணர்வுகளை ,கோவில்கள் எப்படி சமுதாய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்பதை, அன்னையின் அன்பை, தாய்மையின் அற்புதத்தை ,நகர வாழ்வின் சோரத்தை, அதன் சாரத்தை,பெண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்லும் நடைமுறையை, அமெரிக்க வாழ்க்கையின் மீது கொள்ளும் மோகத்தை, இலையுதிர் காலம் கற்றுத் தரும் பாடங்களை,கொரொனா பின்னணியில் ஒரு பேரன்- பாட்டி இருவருக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பை இது போல் இன்னும் மனதை நெகிழ வைக்கும் பல சூழல்களை,நிகழ்வுகளை இத்தொகுதியில் உள்ள கவிதைகள் உணர்வு பூர்வமாகப் பேசுகின்றன.
கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தைக் காட்டிடும் விழியாக அமைந்து, வாழ்வின் சாரத்தை எடுத்தியம்பும் மொழிகளாக,கண்களில் கசிந்து சூடேற்றும் துளிகளாக விளங்குகின்றன.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India