Step into an infinite world of stories
Romance
ஒவ்வொரு புது காதலும் கந்தர்வ காதல் என்ற பிம்பத்துடன் தான் தொடங்குகிறது, அது வளரும் ஒவ்வொரு நொடியும் அதன் மரணமும் சேர்ந்தே வளர்கிறது. சாதாரண மனித காதலாக பரிணாம மாற்றம் கொண்டு சராசரி பிம்பமாய் மாய்ந்து வேறு உரு கொண்டு ஊழ் வழியினூடே எங்கோ சென்று எதிலோ முட்டி நின்றுகொண்டு முழித்து முழித்து திகைத்து பார்க்கும்போது எங்கே அந்த ஊழ் தன் வினையை புரிந்தது என்று அறியாமல் தவித்து தடுமாறி கண்ணீருடன் நின்று ஏங்குவது அல்லவே "கந்தர்வ காதல்...!!!"
ஒரு காதலும் இதுவரை புனிதம் என்று தோன்றாமல் ஏனோ யாருக்கும் இருப்பதில்லை.உண்மையில் காதலின் வலிமை அந்த நம்பிக்கையா அல்லது அதில் தோய்ந்து போய் இருக்கும் உள்ளங்களுக்கா...? ஒரு காதல் எப்படி ஒவ்வொரு நொடியும் காதலில் இருக்கும் மனங்களில் நாள்பட மறுவார்ப்புக்கு ஆட்படுகிறது என்பதை மிக மிக நுண்மையாக அலசி ஆராயும் காதலர்களின் மனம், தடுமாற்றம், நெருங்கி விலகும் காமம், அதில் தோன்றும் மென் கசப்புகள் மற்றும் உடம்பே இனிப்பாய் மாறும் நொடிகள் என்று இக்காலத்திய காதலை வாசிக்கும்போது நாமே அந்த காதலர்களாய் மாறி உணரும் விதத்தில் எழுதப்பட்ட காதலர்களின் உளவியல் என்ற பரிணாமத்தில் எழுதப்பட்டுள்ள குறுநாவல் இது.
Release date
Ebook: 14 February 2023
English
India