Step into an infinite world of stories
Religion & Spirituality
கவித்துவமான தலைப்பு கொண்ட இந்த நூல் ஒரு புராண நாவல்! புராண நாவலா? இது என்ன விந்தை.... என்று உங்களிடம் பலருக்கு எண்ணத் தோன்றும். ஆனால் அதுவே உண்மை. நம் புராணங்களில் எவ்வளவோ சுவாரஸ்யமான விஷயங்கள் புதைந்துள்ளன. அவைகளில் ஸ்ரீகிருஷ்ணனின் பெருமைகளை எடுத்துக் கூறிடும் ஸ்ரீ பாகவதம் ஒன்று. அந்த பாகவதத்துக்குள் நான் கண்டு வியந்த ஒரு விஷயம்தான் இந்த புராண நாவலுக்கு அடித்தளம்!
இதன் ஹீரோ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான்! கதாநாயகியோ ஒருவர் மாத்திரமல்ல. பாமா, ருக்மிணி, ஜாம்பவதி என்று ஒருவருக்கு மூன்று பேர். இக்கதைக்குள் பிள்ளையாரும் ஒரு முக்கிய பாத்திரம்! எல்லாவற்றுக்கும் மேலாக சமந்தகமணி என்னும் ஒரு அதிசய மாலைக்கு இதில் பிரதான பாங்கு. இந்த சமந்தகமணிதான் சகலத்துக்கும் காரணம்.
நம் மனித வாழ்வில் பொறாமை, காதல், கோபம், சூது, கலிவு என்கிற குணங்களுக்கெல்லாம் எப்படி கணிசமான இடம் உள்ளதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல. நாம் தேவர்கள் என்றும் தெய்விக புருஷர்கள் என்றும் போற்றும் புராண காலத்து மனிதர்கள்!
இந்த நாவல் காலத்தையும் பிரதிபலிக்கிறது. பல அரிய உண்மைகளையும் இது நமக்கு உணர்த்துகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை ஏன் எல்லோருக்கும் மிக பிடிக்கிறது என்பதை இந்த நாவலை வாசித்து முடிக்கையில், உணரலாம். ஆழ்வார்களின் பாசுரக் கருத்துகள் தலைமை தாங்கி வர ஒவ்வொரு அத்தியாயமும் பரபரப்பாக செல்லும்.
அன்புடன், இந்திரா சௌந்தர்ராஜன்
Release date
Ebook: 3 January 2020
English
India