Step into an infinite world of stories
Classics
ஒரு மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறுவது என்பது மனித குலத்தின் உயர்ந்தபட்சக் கற்பனை. மனிதன் கண்ணுக்குத் தெரியாதவனாக மாறினால், எவ்வளவோ விஷயங்களை சாதிக்க முடியும். ஆனால், அந்த விஷயத்தையும் வெல்ஸ் கையாண்டிருப்பது வேறொரு வகையாக. கண்ணுக்குத் தெரியாத மனிதனாக மாறும் ஒருவன், சந்திக்க நேரும் பிரச்சினைகளும், அவை அவனை எது வரை இழுத்துச் செல்கிறது என்பதையும்தான். விஞ்ஞான வாய்ப்புகளை தவறாகப் பயன்படுத்தாமல், நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையே இதன் மூலம் வெல்ஸ் நமக்கு உணர்த்துகிறார். விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி தன்னை கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் அறிவு, தவறான வழிகளில் பயணம் செய்வதால் முற்றிலுமாக அழிந்து போகிறது என்பதை உணர்த்துகிறது இந்த நாவல்.
இந்த ஒரே ஒரு நாவலின் மூலமே ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துத் திறமையை நாம் உணர முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அவர் எழுதி வெளியானது இந்த நாவல். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக அது விஞ்ஞான அறிவு குறைவான ஒரு காலகட்டமே என்பதை உணர முடியும். கண்ணுக்குத் தெரியாத மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கையையும் இதில் யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிறார் வெல்ஸ். இதை நாவலின் முதல் பாராவிலேயே நாம் உணரலாம். விறுவிறுப்பு, சுவாரஸ்யம், திருப்பம் ஆகியவற்றை இந்த 21- ஆம் நூற்றாண்டில் வாசிக்கும்போதும் நம்மால் உணர முடிவது வெல்ஸின் வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போதும் கூட, இதை சாத்தியமற்றது என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவுக்கு இந்த நாவலைக் கட்டமைத்திருக்கிறார் அவர். அதற்கும் மேலாக, மனிதன் பெற முடியாத அற்புதமான சக்தி ஒன்றை பெற்றால், அதை எப்படி பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.
Release date
Ebook: 8 March 2022
English
India