Step into an infinite world of stories
Short stories
பல வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் 'சசி' என்ற பெயரில் ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாகி வந்தன. பிறகு காலப்போக்கில் வாரப் பத்திரிகைகளில் அவ்வப்போது ஒரு பக்கக் கதைகள் பிரசுரமாயின. அவற்றைப் படிக்கும் போது மனதில் 'நாமும் எழுதிப் பார்த்தால் என்ன?’ என்று தோன்றியது.
பல பத்திரிகைகளில் படித்துப் பார்த்து, தனித்தாளில் அந்தக் கதைகளில் உள்ள சிறப்பு அம்சங்களைக் குறித்துக் கொண்டேன்.
குறைவான, செறிவான வர்ணனை, சொற் சிக்கனம், ஆரம்ப வரியிலேயே வாசகரை ஈர்க்கும் தன்மை, முடிவை நோக்கி வேகமாக ஓடும் கதைப் போக்கு, வாசகர் எதிர்பார்க்கும் முடிவுக்கு மாறாக ஒரு முடிவுடன் கதை இருக்க வேண்டும் என்ற உறுதி. ஆரம்ப காலத்தில் இரண்டு பக்கங்களுக்குக் கதை ஓடிவிடும்; மறுபடியும் ஒரு வாசகனாகப் படித்து, அனாவசிய வாக்கியங்களை, சொற்களை நீக்கிவிட்டு, மறுபடியும் செப்பனிட்டுத் திருத்தி, எழுதி, திருப்தியுடன் தபாலில் சேர்க்கும் பொறுமை தேவையாயிருந்தது!
Release date
Ebook: 17 May 2021
English
India