Step into an infinite world of stories
History
இது ஒரு வரலாற்று நூல். மகாவம்சம் என்னும் நூல் இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூல். அதிலுள்ள கஜபாகு என்ற மன்னனின் பெயர் சிலப்பதிகாரத்தில் வருவதை வைத்துத்தான் நாம் சிலப்பதிகாரத்துக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் காலம் கற்பித்தோம். இது போன்ற நிறைய தமிழ் அதிசயங்களை இந்த நூல் பகர்கிறது. விஜயன் என்னும் 2500 ஆண்டுக்கு முந்தைய மன்னனுக்கு பாண்டியர்கள்தான் பெண் கொடுத்தனர் என்ற செய்தி சிங்களவர்களும் தமிழர்களும் நெருங்கிய உறவினர் என்பதைக் காட்டுகிறது.
இராவணன் உள்பட இலங்கையர்கள் எப்படி பருவக் காற்றைப் பயன்படுத்தி, செலவே இல்லாமல், பாய்மாரக் கப்பலில் இந்தியாவுக்கு வந்து சென்றனர் என்பதை அறிய உதவும் குறிப்புகளும், அசோகன் பற்றி நாம் அறியாத செய்திகளும், மகாவம்ச நூலில் இருக்கின்றன.
Release date
Ebook: 2 February 2023
English
India