Step into an infinite world of stories
Short stories
பத்மினி பட்டாபிராமன் எழுதி வெளியிட்டிருக்கும் இந்த சிறுகதைகள் தொகுதியில், மொத்தம் 24 சிறுகதைகள் உள்ளன.
பல கதைகளும், அமுதசுரபி, கல்கி,மங்கையர் மலர், விகடன், கலைமகள்,குமுதம் லேடீஸ் ஸ்பெஷல் போன்ற பல பத்திரிகைகளில் பரிசு பெற்றவை.
கலைமகள், கல்கி. லேடீஸ் ஸ்பெஷல் வெளியிடும் தீபாவளி மலர்களில் இடம் பெற்ற சிறப்பு சிறுகதைகள்.
அமுதசுரபியில் வெளியாகி, இலக்கிய சிந்தனையின் பரிசு பெற்றது “புது வெளிச்சம்” சிறுகதை சாவியில் வெளியாகி, எழுத்துலக ஜாம்பவான் திரு. சாவி அவர்களால் (கடிதம் மூலம்) பாராட்டப் பட்டது,”ஒருதரம் ஒரேதரம்” சிறுகதை.
எழுத்துலக பிதாமகர், அமரர் திரு. விக்கிரமன் அவர்கள் துவங்கிய “இலக்கியப் பீடம்” பத்திரிகையில் பரிசு பெற்றவை, “இதுவும் ஒரு தண்டனைதான்”, “அதுவாகி நின்று” கதைகள்.
“பயணம்” சிறுகதை, பூடான் நாட்டின் பின்னணியில், விபத்தில் இறந்த தன் மகனை அடையாளம் காணச் செல்லும் ஒரு வயதான தந்தையின் அனுபவங்களைப் பேசுகிறது. குமுதத்தில் வெளியாகி பெரும் பாராட்டுப் பெற்ற சிறுகதை.
ஏற்காட்டுக்கு விடுமுறைக்குச் செல்லும் ஒரு குடும்பத்தை, ஒரு குரங்குக் கூட்டம் துரத்துகிறது. ஏன்? அமரர் கல்கி நினவு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது “இரு போராட்டம்” என்ற இந்தக் கதை..
“மதி மதிப்பு கதை” யும் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற மற்றோர் கதை.
சுந்தரம் ஃபைனான்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை “ஒரு மயிலாப்பூர் ஏஜண்ட்.”
ஆனந்த விகடனில் வெளியானது “பணப்பந்து”
“ஷான் என்ற ஷண்முகநாதன்” குமுதம் இதழில் வெளியானது.
கடன் வாங்கி சுமாராய் ஒரு வீடு கட்டி, அதில், நாளை கிரகப் பிரவேசம் நடைபெற இருக்கும் போது அதன் வெள்ளை சுவரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்..யார் ஒட்டினார்கள்?
கலைமகளில் வெளியான சுவரொட்டி சிறுகதையின் சாரம் இது.
கலைமகளில் வெளியான மற்ற கதைகள், “காணிக்கையான கடன்”, “நீதிக்கு அப்பால்” ஆகியவை.
சிரிக்க வைக்கும் கதைகளாக, “பானுமதியும் பாசுமதியும்’ வைத்து தரும் வைபோகமே”இவை லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர் பத்திரிகைகளில் வெளியானவை.
லேடீஸ் ஸ்பெஷல் 2013 தீபாவளி மலரில் வெளியானது புத்தகத் தலைப்பான, வால்பாறை பின்னணியில்
“மலைச் சரிவில் ஒரு டீக்கடை” அம்மா நடத்தும் டீக்கடையில் யாரோ தவற விட்ட பணப்பை, போக்கிரி மகன் கையில் கிடைக்கிறது.. அப்புறம்..?
வித்தியாசமான வாசிப்புக்கு ஏற்ற கதைகள் இந்த தொகுப்பில் உள்ளன..
Release date
Ebook: 17 May 2021
English
India