Step into an infinite world of stories
Non-Fiction
இன்று இருக்கும் நிலையிலிருந்து இன்னும் மேல்நிலைக்கு முன்னேற விரும்புவதோடு தனது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோரையும் ஒவ்வொருவரும் முன்னேற்ற வேண்டும். இந்த நவீன யுகத்தின் வேகமான வாழ்க்கையில் சீக்கிரமாகவும் இதைச் செய்து சாதிக்க வேண்டும். இவற்றிற்குச் சில அரிய பண்புகள் தேவை. இவற்றை வாழ்ந்து காட்டி சாதனைகள் படைத்தவர்கள் பலர்.
இன்னல்களைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை; இருக்கின்ற சூழ்நிலையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்கவில்லை; சமுதாயத்தைக் குறை கூறவில்லை. தங்களது இலட்சியத்தை வகுத்துக் கொண்டு முன்னேறினார்கள். மற்றவர்கள் அதிசயித்த போது அவர்களையும் முன்னேற்றினார்கள். முன்னேற உத்வேக உணர்வை ஊட்டினார்கள்.
ஹோவர்ட் கெல்லி, ரொனால்டோ, ஹெலன் கெல்லர், தசரத் மஞ்சி, துளஸி கௌடா, நெப்போலியன் உள்ளிட்ட சாதனையாளர்கள் பலரை இந்த நூல் சுட்டிக் காட்டுகிறது. உண்மைச் சம்பவங்கள், அழகிய கதைகள் ஆகியவற்றுடன் ஜீனியஸ் ஆக வழி, மூளை ஆற்றலைக் கூட்ட வழிகள் உள்ளிட்ட நல்ல பல கருத்துக்களையும் இந்த நூல் 31 அத்தியாயங்களில் தருகிறது.
Release date
Ebook: 19 December 2022
English
India