Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
என்னுரை
சமூக முரண்களின் கவிதையாக்கம்
உரைநடையாக புனைகதையை எழுதிவரும்போதே கவிதையிலிருந்து சில வரிகளைத் தானாகவே கற்பனை செய்து புனைகதையின் கட்டமைப்பாக அமைத்துத் தருவதுதான் கவிதையாக்கம்.
- சி, கனகசபாபதி,
இலக்கிய விமர்சகர்
முரண்கள் பல நிறைந்த நம் சமூக வாழ்க்கையில் கவிதைகளும் பல்வேறு முரண்களினாடேத் தொடர்கிறது. கால இலக்கியம் என்பது கற்பதற்கும் கற்றதை பரவலாக வெளிப்படுத்துவதற்கும் நிறைய சந்தர்பங்களை உருவாக்கித் தருகிறது. கவிதையென நினைத்து எழுதுவதெல்லாம் கவிதையாகிவிடுவில்லை. எழுதுகிற கவிதைகள் அனைத்தும் சமூகத்தின் சாட்சியாய் நிற்பதுவுமில்லை. நவீனமோ மரபோ எல்லாவற்றையும் ஓர் அலகீட்டு வாய்ப்பாட்டுடன் கையாள வேண்டியுள்ளது.
சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், என எழுதியவனுக்கு, எப்படிக் கவிதைகள் பிடிபட்டது என்பது ஒரு சோக அனுபவந்தான். பல சக்கர வண்டியோட்டிக்கு இரு சக்கர வண்டியோட்டுதல் என்பது முடியாத ஒன்றல்ல; முடியும். அதற்கானத் தகுதியும் முயற்சியும் கலைஞனுக்குத் தேவையாய் இருக்கிறது.
கவிதைகள் எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் பிடிபடுவதில்லை. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கினைப் போல ஒரு நல்ல கவிதை அமைய தேர்ந்த மனநிலையும் அது சார்ந்த சூழலும் ஒருங்கே அமையவேண்டும் என்பதுதான் முக்கியமாகப்படுகிறது. கவிதை தளத்தைப் பொருத்தவரையில் என்னைக் கவிதைக்கும் கவிதைக்கு என்னையும் பிடித்திருக்கிறது என்றும் சொல்லலாம். ஒரு பெரும் காப்பியத்திற்குள் அடக்க வேண்டிய விசயங்களை தைரியமாய் ஓர் சிறு கவிதையில் முன்மொழிந்து விடலாம் என்கிற தைரியந்தான் பலவிதமான சமூகக் கருத்துக்களை உள்வாங்கும்போது அனுபவமாகவும் படிப்பினையாகவும் உணர நேரிடுகிறது.
அந்த வகையில் தொடர்கிற என் கவிதைப் பயணத்தில் 'கனவுகள் விரியும்', 'எவரும் அறியாத நாம்' ஆசிய இரு கவிதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து 'முரண்தடை' மூன்றாவது கவிதை நூலாகும். 1980களில் தொடங்கிய என் கவிதைப் பயணம் தொடக்க காலத்திற்கும் தற்காலத்திற்கு மாசு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாட்டில் ஏராளமான வித்தியாசங்களைக் காணமுடிகிறது. அது கவிதையின் வெற்றியாகக் கூட இருக்கிறதெனச் சொல்ல முடியும். இத்தொகுப்பிற்கு உதவிய அனைத்து நல் இதயங்களுக்கும் வாசித்துப் பேசப்போகும் உங்களுக்கும் எனது நன்றிகளை பலமாய் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
- விழி.பா.இதயவேந்தன்.
Release date
Ebook: 18 December 2019
English
India