Step into an infinite world of stories
Religion & Spirituality
மனிதனின் வாழ்வில் அன்றாடம் தோன்றும் பிரச்சினைகள் ஏராளம். வேத அங்கங்கள் ஆறில் ஒன்றான ஜோதிடம் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதற்கான காரணங்கள், அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆனால் மிகவும் நுட்பமான கலையான இதில் தேர்ந்தவர்கள் சிலரே. ஆகவே ஜோதிடக் கலையை நன்கு அறிந்த ஒருவர் மூலமே ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நவகிரகங்கள் பற்றிய அனைத்து ரகசியங்களையும் விவரங்களையும் ஒருவர் அறிய வேண்டியது இன்றியமையாததாகிறது. அந்த வகையில் பல்லாண்டுகள் இந்தக் கலையை ஊன்றிப் பயின்று பலருக்கும் இதன் மூலம் சேவை செய்யும் ஒருவர் எழுதிய இந்த நூல் அனைவருக்கும் மிக அருமையாக உதவி செய்கிறது.
நவகிரகங்களைப் பற்றிய அரிய விவரங்களை இது தருகிறது. ஆகவே பிரச்சினைகளைத் தீர்க்கும் கலைக் களஞ்சியமாக அமைகிறது. திரு. சந்தானம் சீனிவாசன் தனது ஆழ்ந்த அறிவுடன் அனுபவத்தைக் குழைத்து இந்த நூலைப் படைத்துள்ளார். அனைவரும் படிக்க உகந்த நூல் மட்டுமல்ல இது; நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிசளிக்கவும் ஏற்ற நூல் இது.
Release date
Ebook: 7 September 2023
English
India