Step into an infinite world of stories
Religion & Spirituality
காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே. நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு. அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.
இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும். இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படும் ஞான மொழிகள் இவை.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள் பத்திரிகைகள் மற்றும் இதர நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட அருமையான நவீன ஞானமொழிகளை இந்த முதல் பாகத்தில் படிக்கலாம். இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.
Release date
Ebook: 7 September 2023
English
India