Step into an infinite world of stories
Religion & Spirituality
திரு. சந்தானம் சீனிவாசன் பாரம்பரியம் மிக்க தேசபக்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் திரு. வெ. சந்தானம் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்ற தியாகி. மிகப் பெரும் பத்திரிகையாளர். அவரது வழி வந்த இவர் மதுரையில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரும் நூற்பாலையில் பொறியாளராகப் பதவி வகித்தவர். அதே நிறுவனத்தில் பின்னர் அனைவருக்கும் பயிற்சி கொடுக்கும் சிறப்புப் பயிற்சியாளராகத் திகழ்ந்தார்.
பணி ஓய்வு பெற்ற பின்னர் தனியாக சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுய முன்னேற்றம், வாழும் வழி முறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் இவர் பயிற்சி வகுப்புகளை பல நகரங்களிலும் எடுத்து வந்தார். இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்த இவர் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஞான மொழிகளைத் தொகுக்க ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கில் அவற்றை தொகுத்து வைத்துள்ளார். சித்த மருத்துவத்தைப் பயின்று அதில் பட்டம் பெற்றவர். எழுத்து மற்றும் பேச்சுத் துறையில் சிறந்து விளங்கிய இவருக்கு ஒருவரைப் பார்த்தவுடன் அவரது கடந்த காலத்தையும் இனி வரும் எதிர்காலத்தையும் கணிக்கக் கூடிய சக்தி உண்டு என்பதால் தினமும் பலரும் வந்து ஆலோசனை பெற்றுச் செல்வது உண்டு. இவர் சென்னையில் மனைவி மற்றும் மகன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
Release date
Ebook: 15 December 2023
English
India