Step into an infinite world of stories
Personal Development
தேர்வுகள் எப்போதுமே பதட்டத்தையும், பரபரப்பையும் உண்டுபண்ணக் கூடியவையாகவே இருந்து வருகின்றன. இதில் எந்தத் தேர்வும் விதிவிலக்கல்ல. யாரும் பதட்டப்படாதவர்களும் அல்ல. எனினும், அந்தப் பதட்டம் தேர்வில் நமது செயல்முறையை பாதிக்காத அளவுக்கு பார்த்துக்கொண்டோமேயானால் விளைவுகள் நல்லதாக அமையும்.
பள்ளிப் பருவத்தில் நாம் எழுதும் எல்லாத் தேர்வுகளுமே படபடப்பானவை என்றாலும் எட்டாம் வகுப்பிலோ, பத்தாம் வகுப்பிலோ எழுதும் முதல் பொதுத் தேர்வு உண்மையிலேயே ஒரு பரபரப்பான புதிய அனுபவமாகும். அதன்பின் நடக்கும் +2 பொதுத் தேர்வு பிற்கால வாழ்க்கை நிலையையே முடிவு செய்யக் கூடியதாக இருப்பதால் அந்த சமயத்தில் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலுள்ள அனைவருமே பதட்டமாகி விடுவார்கள்.
தேர்வுகளைப் பொறுத்தவரை அவற்றை நாம் அணுக வேண்டிய முறையில் அணுகினாலேயே தேவையற்ற பதட்டத்தைக் குறைத்துவிட முடியும். தேர்வு சமயங்களில் நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் கண்டிப்பாக செய்யக் கூடாது என்பனவற்றை உணர்ந்து செயல்பட்டாலே போதும், எந்த பிரச்சனையும் வராது.
அப்படி நீங்கள் தேர்வு சமயங்களில் எந்தெந்த விஷயங்களை எப்படி கையாள வேண்டும் என்பதை முறையாக இந்நூலில் விளக்கியிருக்கிறேன். ஏற்கனவே நான், ‘தினகரன்’, ‘குமுதம் சக்ஸஸ்’ இதழ்களில் எழுதிய தேர்வு சம்பந்தமான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
இதில் அறிவுரையைவிட, அனுபவப்பூர்வமான, யதார்த்த ஆலோசனைகள் அதிகம் இருக்கும். தேர்வுக்குப் போகும் ஒவ்வொருவரும் இந்நூலில் உள்ள ஆலோசனைகளைப் பின்பற்றினால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.
Release date
Ebook: 23 December 2021
Tags
English
India