Step into an infinite world of stories
Short stories
'இந்தப் பிரபஞ்சம்' சிறுகதைகளால் நிரம்பியது என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு. ஆம்... நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியின் அசைவுகளிலும், ஒரு சிறுகதையின் தொடக்கமும், முடிவும் இருப்பதைத்தான் அப்படிச் சொல்கிறார் இவர். பொதுவாக இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் கலந்து நகைச்சுவை உணர்வுடன் சமுதாயத்தின் அன்றாட நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.
கே.எஸ். ரமணாவின் சிறுகதைகள், நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. எந்தக் கதையிலும் ஆசிரியர் அட்வைஸ் திலகமாகவோ, அறிவுரைச் சித்தராகவோ, அவதாரம் எடுக்காமல் சக நண்பனைப் போல பக்கம் அமர்ந்து, தோள் தொட்டு நட்புடன் உரையாடுவதைப் போன்ற தொணிதான் பிரதிபலிக்கிறது.
வாருங்கள் வாசகர்களே... இந்த ‘செங்காந்தளை நாமும் நுகர்வோம்.
Release date
Ebook: 3 March 2023
English
India