Step into an infinite world of stories
Religion & Spirituality
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு மலராகத் திருவடியில் அஷ்டோத்தர சத அர்ச்சனை புரியுமாறு நூற்றெட்டு தலைப்புக்கள் கொண்டதாக மலர்த்தியருளியிருக்கிறார். மதிப்புக்குகந்த ஓர் அறிவாளரும் பண்பாளருமான சக ஆசிரியரோடு சேர்ந்து இந்த 108 கட்டுரை கொண்ட நூலை ஆக்குமாறும் அருளியிருக்கிறார். அந்த சக ஆசிரியர் ஆனந்தத்தாண்டவபுரம் பிரம்மஸ்ரீ ப. ராமதாஸ் ஐயரவர்கள். சாஸ்திரங்கள், ஸம்ஸ்கிருத காவியங்கள் ஆகியவற்றில் வல்லுநரான பெரும் வித்வான். காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளின் அருளுக்கும் பாராட்டுக்கும் பாத்திரமானவர். சிருங்கேரி பீடாதிபதியர்களிடமும் மிகுந்த வித்வத் நெருக்கம் கொண்ட பாக்கியவந்தர். தருமை ஆதீனத்தாரால் 'வித்யா வாசஸ்பதி' விருதம் அளித்து கௌரவிக்கப்பட்டவர். குணப்பண்புளில் மிக்கவர். இவ் வைதிகோத்தமரை நமது ஸ்வாமியும் தமது அருள் வலைப்படுத்தியிருக்கிறார். எவ்வளவு நன்றாக அவர் வலையில் இவர் சிக்கியிருக்கிறாரென்பதை இந்நூலில் பேர் பாதிக் கட்டுரைகளாக விரியும் இவரது 'ஸ்ரீ ஸாயி கர்ணாம்ருத' ஸ்தோத்ரம் விளங்கக் கூறும்.
Release date
Ebook: 24 April 2023
English
India