Step into an infinite world of stories
Fiction
புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! திருச்சி, மதுரை, சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி நிலையங்களின் வாயிலாக ஒலிபரப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரைகளின் தொகுப்பு நூல் இது. வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற இந்த உரைகள் இதுவரை ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதலாம் பாகம் இது!
புவி வெப்பமாகும் அபாயத்தால் ஏற்படும் விளைவுகள், மரங்கள் செய்யும் நன்மை!, புவி வெப்பமாதலால் புராதனச் சின்னங்கள் பாதிப்பு, கூரைத் தோட்டங்களை அமைப்போம்!, நச்சுவாயுவே நாசத்திற்குக் காரணம்!, பவளப் பாறைகளைக் காப்போம், நம்முடைய நீர்வளத்தைப் பாதுகாப்போம்!, மின் சக்தியைச் சேமிக்கச் சில வழிகள்!, கங்கையைக் காப்போம்!, நச்சுப் புகையால் ஆறு மீட்டர் கடல் மட்டம் உயரும் அபாயம்!, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க பத்து வழிகள்!, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்போம்!, மணல் சுரண்டல் என்னும் மாபெரும் ஆபத்து, கடல் வாழ் உயிரினத்தைக் காத்தல் வேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரைக் காப்போம், சிட்டுக்குருவிகளைக் காப்போம்!, காற்றைப் போற்றி ஒரு கவிதை உள்ளிட்ட கட்டுரைகள் இந்த பாகத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தகுந்தது. இந்த முதலாம் பாகம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று! பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 19 March 2025
Tags
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India