Step into an infinite world of stories
Fiction
புவி வெப்பமயமாதலின் தாக்கம் உலகளாவிய வகையில் வெளிப்பட்டு வருகிறது. அதற்கான விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்படுத்தப்பட வேண்டிய இந்நேரத்தில் வெளிவந்திருக்கிறது இந்த முக்கியமான நூல்! திருச்சி, மதுரை, சென்னையில் இயங்கி வரும் அகில இந்திய வானொலி நிலையங்களின் வாயிலாக ஒலிபரப்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உரைகளின் தொகுப்பு நூல் இது. வானொலி நிலைய நேயர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற இந்த உரைகள் இதுவரை ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் இரண்டாம் பாகம் இது!
ஓஜோன் உறையின் அவசியம், ஆர்க்டிக் உருகுகிறது!, பழைய காடுகளைக் காப்போம், சுத்த நீர் சேமிப்போம்,கடல் வளம் காப்போம், கணிணிகளால் ஏற்படும் மாசுகளைத் தவிர்ப்போம், மரங்களை வெட்டாதீர்கள்! மழைக்காடுகள் என்னும் இயற்கை அதிசயம்!, காடுகள் இல்லாத எதிர்காலம்!, புவி வெப்ப உயர்வு!, துருவக்கரடிகளுக்கு அபாயம்!, உலகின் ஒப்பற்ற ஒரு கிராமம், சுற்றுப்புறச் சூழலைப் பற்றிய சில உண்மைகள்! , பெட்ரோலுக்கு மாற்று, சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் சில மாற்று எரிபொருள்கள், ஹைட்ரஜன் வாகனங்கள், வியாதிகளைப் போக்கும் வேப்ப மரம்!, பூமி கிரகத்தின் சர்வதேச ஆண்டு!,சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவோம்!, நமது சுற்றுப்புறச் சூழல் உரிமைகள் உள்ளிட்ட நாற்பது கட்டுரைகள் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தகுந்தது. இந்த இரண்டாம் பாகம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று! பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India