Step into an infinite world of stories
Non-Fiction
ஆதிமனிதன் மற்றொருவனுக்கு ஒலிகளை எழுப்பியேத் தன் கருத்தைத் தெரிவித்தான். அவனைத் தன் பக்கம் திரும்பச் செய்வதற்கு ஒரு வகையான ஒலியையும், தன் கருத்தை அவனுக்கு வெளிப்படுத்துவதற்கு மற்றொரு வகை ஒலியையும் எழுப்பினான். இந்த ஒலிகளின் சேர்க்கையும் தொடர்ச்சியும் இணைந்து சொற்களாகவும், பேசும் மொழியாகவும் உருவாக்கப்பட்டன.
இன்றைய அறிவியல் வளர்ச்சியின் காலத்தில் இவர்களுக்குள் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல ஊடகங்கள் பயன்பட்டு வருகின்றன. இந்த ஊடகங்களில் தற்போது புதிதாக வந்திருக்கும் ஒரு ஊடகம்தான் இணையம். இந்த இணையத்தில் அனைத்து மொழிகளும் தகவல் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் தமிழ் மொழியையும் இந்த இணைய ஊடகத்தின் வாயிலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அச்சில் வரும் இதழ்களைப் போல் தமிழ் இணைய இதழ்கள், ஒலியின் மூலம் வரும் வானொலிகளை போல் இணைய வானொலிகள், ஒளி மற்றும் ஒலிகளை இணைத்து வரும் காட்சி ஊடகங்களைப் போல் இணையத் தொலைக்காட்சிகள் என்று அனைத்துத் தகவல் தொடர்பு சாதனங்களும் இணையப் பயன்பாட்டில் வந்து கொண்டிருக்கின்றன.
அவற்றை பற்றிய குறிப்புகள் அடங்கிய தொகுப்பே இந்நூலே
Release date
Ebook: 9 May 2022
English
India