Step into an infinite world of stories
தமிழின் முதல் இலக்கண நூலாக இன்றும் நமக்குக் கிடைக்கும் 'தொல்காப்பியம்' இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது பெரும்பாலோர் ஒப்புக்கொள்ளக்கூடியது. மொழி இலக்கணத்துடன் ஏராளமான இசை இலக்கண விதிகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது தொல்காப்பியம்! அந்த இலக்கணங்களை விளக்கும் வகையில் ஒவ்வொரு விதியின் இறுதியிலும் 'என்மர்', 'என்பர் அறிஞர்'... என்றுதான் தொல்காப்பியர் கூறுகிறார். இதிலிருந்து அவருக்கும் முன்பாகவே ஒரு செழுமையான இசைப் பாரம்பரியமும், இசை இலக்கண நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. துரதிர்ஷ்டவசமாக, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இசை இலக்கண நூல்கள் நமக்குக் காணக் கிடைக்கவில்லை. தொல்காப்பியம் தொடங்கி, அதன்பின்னர் எழுதப்பட்டதாகக் கருதப்படும் சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், கூத்த நூல், கம்ப இராமாயணம், பக்தி இலக்கியங்கள் உள்பட ஏராளமான நூல்களில் தமிழிசை இலக்கணம், பண்களின் வகைகள், பண்களின் பெயர்கள், அவற்றைப் பாடும் முறை, பாடல் வகைகள், இசைக் கருவிகளின் வகை, அவற்றின் பெயர்கள், அவற்றை இசைக்கும் முறை ஆகியவை விரிவாக, விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐந்திணைகளாகப் பிரிக்கப்பட்ட தமிழ் நிலம், ஒவ்வொரு திணைக்கும் உரித்தான பாடல் வகைகளையும், இசைக் கருவிகளையும் கொண்டிருந்த செய்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன. படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அவர்கள் மனங்களில் எழக்கூடிய வினாக்களும் அதற்கான விடைகளும்கூட, 'வினா - விடை' வடிவத்தில் பல அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மிக நீண்ட இசை வரலாறு, தமிழிசைக்கு உண்டு என்பதை தமிழ்ச் சமுதாயத்திற்கு மீண்டும் நினைவு படுத்தும் நோக்கத்துடனேயே 'தொல்காப்பியம் முதல் திருப்புகழ் வரை யிலான தமிழ் நூல்களில் காணக் கிடைக்கும் இலக்கணம், வரலாறு மற்றும் சுவாரஸ்யமான செய்திகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. அந்த விவரங்களையெல்லாம் அடுத்தடுத்து நூல்களாகப் படைக்கும் ஆர்வம் உள்ளது.
Release date
Ebook: 10 December 2020
English
India