Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
“தாழப் பறந்த விமானம் “ என்னும் கவிதைத் தொகுப்பு கவிஞர் ஆதித் சக்தி வேல் அவர்களுடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு.”நொய்யலின் நினைவுகள்” அவரது முதல் தொகுப்பு.உரைநடைக் கவிதை அல்லது வசன கவிதை (Prose Poetry)என்னும் வகையைச் சார்ந்தவை அவருடைய கவிதைகள்.
இனப் படுகொலை உலகில் எந்த நாட்டில் நடந்தாலும் அப்பாதகச் செயலைச் செய்த நாட்டை வன்மையாகக் கண்டிக்க உலக நாடுகள் ஒவ்வொன்றும் முன் வர வேண்டும் என்று வலியுறுத்தி, உயிர்களின் மதிப்பை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டும் கவிதை "தாழப் பறந்த விமானம்". அக்கவிதையின் பெயர் இக்கவிதைத் தொகுப்பின் தலைப்பாய் அமைந்து அணி செய்கிறது.
நொய்யல் நதி நச்சுக் கழிவுகளுடன், வாயில் நுரை தள்ளியது போல் பாழ்பட்டு ஓடுவதைப் பார்த்து மனம் நொறுங்கிப் போனதைச் சூழலியல் கவிதையான “நுரை புரண்ட நொய்யலி”ல் சித்தரித்திருக்கிறார். மேலும் ஆறுகளையும் ,நீர் நிலைகளையும் மாசு படுத்தாது பேணுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
"இயந்திரமாய் மாறிப் போன குழந்தைகள்” மற்றும் “குழந்தமையைக் கொண்டாடுவோம்” ஆகிய இரு கவிதைகள் குழந்தமையைப் போற்றுகின்றன.தற்போது சிக்கலில் சிக்கியுள்ள நீதி தேவதை,வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள்படும் துயரம்,எது உண்மையான முன்னேற்றம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம், முதுமை,உரிமைகள் இன்றி உரிமைக் குழுவால் என்ன பயன்,நாட்டின் எல்லைகள் போன்றவை மையக் கருத்தாக அமைந்த பல கவிதைகளை வாசிக்கலாம் இத்தொகுப்பில்.
சமூக அவலங்களையும் ,விளிம்பு நிலை மக்களின் மனக் குமுறல்களையும், தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கும் மன உணர்வுகளையும் ,சாதி மதக் கொடுமைகளையும், எல்லைப் போர்களையும், உலக அழிவுகளையும் பார்க்கும் கவிஞரின் உள்ளம், எரிமலையாய்க் கொதித்து, சூறாவளியாகச் சுழன்று அடிக்கும் விதமாகத் தன் கவிதைகளின் சொற்களில் வடித்துக் காட்டியுள்ளது. . மனித குலத்திற்குக் கேடுகள் செய்யும் இதயமில்லா மனித மிருகங்களின் மீது பாய்ந்து அதர்மத்தை அழிப்பவையாகப் பல கவிதைகள் இத்தொகுப்பில் அமைந்துள்ளன.ஒடுக்கப்பட்டோரின் குரல் பல கவிதைகளில் அடி நாதமாக ஒலிக்கின்றது.
Release date
Ebook: 26 March 2024
English
India