Step into an infinite world of stories
Fiction
மனித குலத்தை ஆட்டிப்படைக்கும் மூன்று ஆசைகள் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
இக்கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவரான சுகுமாருக்கு ஒரே ஒரு ஆசை “பதவி மோகம்'. ரியல் எஸ்டேட் அதிபரான அவர் சற்று வித்தியாசமானவர். அவர் பதவியில் உட்கார விரும்பவில்லை. இரு அனாதைச் சிறுவர்களை பேரனாக சுவீகாரம் செய்துகொண்டு ஒருவனை தமிழக முதல்வராகவும் இன்னொருவனை கர்நாடக முதல்வராகவும் அமர்த்த நினைத்தார். இரண்டு மாநிலங்களில் வெற்றி பெற்றால் மத்திய அரசைக் கைப்பற்றலாம் என்று தீர்மானித்தார்.
இது நடக்குமா?
இயக்குநனராக வேண்டும் என்ற லட்சியத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பெற்றோர்களை உதறித்தள்ளி தான் தயாரிக்கும் சினிமாப்படங்களிலும் முழுவதும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் பங்கேற்கும் "MOVIE ACADEMY FOR WOMEN" என்ற ஸ்தாபனத்தை நிறுவ சிந்துஜா நினைத்தாள். அது சிந்துஜாவின் லட்சியம் மட்டுமல்ல. வெறி கூட. காண்பவர்களைக் கவரும் பேரழகி ரேவதி சினிமா நடிகையாகும் ஆசையில் வீட்டைவிட்டு ஓடி பல இன்னல்களுக்கு ஆளானாள்.
நினைத்ததெல்லாம் நடக்குமா?
லட்சியங்கள் நடைமுறைக்கு ஒத்து வருமா அல்லது வெறும் பகற்கனவா?
மற்றவை கதையில்…
Release date
Ebook: 17 May 2021
English
India