Step into an infinite world of stories
மக்களும், நாடுகளும் ஏன் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர்? போர் என்பது ஓர் அவசியத் தேவைதானா? மனித உள்ளுணர்வின் மோசமான வெளிப்பாடுதான் சண்டையா? அல்லது இயற்கையின் நியதியான ‘வலியதுதான் வெல்லும்’ என்பதன் நிரூபணம் தான் சண்டையா?
“போர்தான் இயற்கையானது; அமைதிதான் இயற்கைக்குப் புறம்பானது” என்று சொல்லப்படுவது உண்மைதானா?
மனித நாகரிக வளர்ச்சிக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதென்றால், சண்டைகள் தீமையானவை, தேவையற்றவை, என்று தவிர்க்கப் படவேண்டும் அல்லவா? பகுத்தறிவுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், எதிரானவை சண்டைகள் என்று தெரிந்திருந்தும் சண்டையிடும் ஒவ்வொரு நாடும், மற்றவனைக் கொன்று தள்ளும் ஒவ்வொரு மனிதனும்தான் ஏதோ விலைமதிக்கவொண்ணா பாரம்பரியப் பெருமையையும் மனித உணர்வுகளையும் காப்பதற்காகப் போரிடுவதாகத்தான் எண்ணுகிறார்கள்.
பின்வரும் பக்கங்களில் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘போர்களின் வரலாறு’ போர்களின் நோக்கம் எப்படியாவது எதிரியைத் தோற்கடிப்பது தான் என்பதை எடுத்துரைக்கும். பல இலட்சக்கணக்கான உயிர்களின் அழிவுக்கும், போர்க்கருவிகளுக்காக எல்லையில்லாத அளவிற்கு செய்யப்பட்ட செலவுகளுக்கும், எண்ணிலடங்காத நாடுகள், நகரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட நாசத்திற்கும், எவ்வாறு போர்கள் காரணமாயிருந்திருக்கின்றன என்பதை விளக்கும்!
Release date
Ebook: 30 September 2020
English
India