Step into an infinite world of stories
4.3
Non-Fiction
கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகளை எடுத்துக் கூறும் இந்நூலைப் படித்துப் பார்க்கும் மகிழ்ச்சிகரமான அனுபவம் எனக்குக் கிடைத்தத்தில் பெரு மகிழ்வு கொண்டேன். நூலின் தலைப்பு பற்றிய விஷயத்தில் நான் ஒரு கற்றுக்குட்டி என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்வதானால் நான் கைரேகை பார்த்துப் பலன் கூற வேண்டி எந்தக் கைரேகை நிபுணரிடமும் எனது உள்ளங்கையை நீட்டியதில்லை. நூலை எழுதிய ஆசிரியர் மிகவும் அக்கறையோடு இதிலடங்கியுள்ள விவரங்களை எழுதியுள்ளார். கைரேகை ஜோஸ்யம் ஒரு மூடநம்பிக்கை என்று இன்றைய புதிய தலைமுறையாளர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்புக் கூறி வரும் நேரத்தில், இந்த இளம் எழுத்தாளர் புராதனப் பொக்கிஷம் எனப் போற்ற வேண்டிய இத்துறையில், இதன் அறிவியல் பாதையை வெகு ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுத்துக் கையாண்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
மனிதர்களுடைய கைரேகை, உள்ளங்கையின் நிற வாகுகள் இவற்றிலிருந்து விரிவாகக் கூறத் துவங்கி அவற்றின் பலாபலன்களை எடுத்துக் கூறியுள்ள விதம் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொள்வதாகவே அமைந்துள்ளது கண்கூடு. கூறியுள்ளவற்றைப் படவிளக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்கே. இத்துறை பற்றிய ஞானம் ஓரளவு உடனடியாக ஏற்படும் அளவுக்கு உள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
உள்ளங்கை ரேகைகளோடு மட்டுமின்றி கட்டை விரல் மற்ற விரல்களின் தன்மைகளையும் விவரித்துள்ளார். எந்த வகையான விரல்கள் என்னென்ன குணவிசேஷம் கொண்டவை என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
கைரேகை சாஸ்திரம் பற்றிய மாதிரி அட்டவணை ஒன்றையும் தந்து இந்நூலை முடித்துள்ளார் இதன் ஆசிரியர். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கைரேகை பற்றி அந்த வயதிலேயே தெரிந்து கொள்ளாமலிருப்பது நலம் என்று கருதுகிறேன். ஏனெனில் உள்ளங்கை ரேகைகள் இந்த வயதிற்குப் பிறகுதான் ஒழுங்காக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
கைரேகை பற்றிய அறிவியல் உண்மைகள் புத்தகம் கருத்துக் குவியல்களடங்கிய ஒரு அரிய புத்தகம். இதற்கான ஆய்வினை மேற்கொண்ட போது இந்த ஆசிரியர் திரு. கே.பத்மநாபன் எந்த அளவு கடின உழைப்பை அதற்காக நல்கியிருப்பார் என்று தெரிய வருகையில் அவரது பூரண ஈடுபாட்டினைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆசிரியரை வாழ்த்த எண்ணி எனது உள்ளங்கையை நான் உயர்த்தினாலே அது அரசியல் கலந்ததாக ஆகிவிடுமென்பதால் எனது கட்டை விரலை வெற்றிப் பாணியில் வளைத்து மட்டும் வாழ்த்துகிறேன்.
- ராம்ஜி (அபஸ்வரம்)
Release date
Audiobook: 24 September 2020
Tags
English
India