Step into an infinite world of stories
Fiction
தமிழ் சான்றோர்கள் தமிழ் இலக்கியங்களில் ஐம்பெரும் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் வரையறுத்துள்ளனர். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் அமைந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி போன்றவை ஐம்பெரும் காப்பியங்கள்.
இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் அது சிறுகாப்பியம் எனப்படும். அந்த வரிசையில் நாககுமார காவியம், யசோதார காவியம், நீலகேசி, உதயணகுமார காவியம், சூளாமணி ஆகியவை ஐஞ்சிறு காப்பியங்களாகும்.
இவைகள் தவிர, பிற்காலங்களிலும் பல்வேறு பெரும் காவியங்களும் சிறு காப்பியங்களும் தமிழ் கவிஞர்களால் படைக்கப்பட்டன.
உதயணகுமார காவியம் கொங்குவேளிர் பாடிய பெருங்கதை ஒன்றின் வழி நூலாக அமைந்தது. இந்த நூலை பாடிய ஆசிரியரின் பெயரும் அவர் ஊர் பற்றியும் எந்த தகவலும் தெரியவில்லை.
இந்த நூல் ஆறு காண்டங்களைக் கொண்டது. 367 செய்யுட்களால் பாடப்பட்டுள்ள உதயணகுமார காவியத்தில் கதை நாயகன் நான்கு மனைவிகளை சமண சமய நெறிப்படி திருமணம் புரிந்து உலக நிலையாமையை அறிந்து தவ நிலையில் மேற்கொண்டதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.
துறவு நெறியைக் கூறும் இந்த நூலில் தொடக்கத்தில் சிற்றின்பங்களைப் பற்றி விரிவாக அலசப்பட்டாலும், இறுதியில் துறவு நெறியைப் பற்றியும் சமண சமய நெறிமுறைகளையும், தவ ஒழுக்கத்தையும் விரிவாகப் பேசுவதை காணலாம்.
உதயண குமார காப்பியத்தில் மிகச் சிறந்த வர்ணனைகளும், சமண சமயத்தின் கொள்கைகளும் விரிவாக பேசப்பட்டுள்ளது. இந்த நூலைத் தமிழ் சமுதாயம் படித்து இதன் சுவையை உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
Release date
Ebook: 9 July 2021
English
India