Step into an infinite world of stories
Fiction
பல்வேறு இலக்கிய தொண்டுகளை செய்து வரும் Pachyderm tales நிறுவனம் மூத்த குடிமக்களை போற்றி அவர்கள் எண்ணங்களை எழுத்துருவாக்கி 'வல்லமை தாராயோ' என்ற புத்தகமாக வெளியிட்டு அவர்கள் கனவை நனவாக்கி ஏற்றம் அளித்துள்ளனர்.
இந்த நூலில் ஏழு எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களை கதைகளாக செதுக்கி உள்ளனர்.
கதையின் ஒவ்வொரு கதாநாயகியும் வல்லமை கொண்ட தாயாகவும், தோழியாகவும், தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி பயணம் செய்பவளாகவும் நம் நெஞ்சில் நிறைகிறாள்.
பெண்கள் அடிமையானதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று கல்வி இல்லாமை மற்றது அச்சமும் நாணமும் மிகையாக இருந்தது. அவற்றை தகர்த்தெறிந்து உச்சத்தை தொட்ட மாந்தர்களை சுற்றிப் பின்னப்பட்ட கதைகள்.
"அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!"
என்ற பாரதியின் எண்ணத்தை வண்ணமாக்கும் கதைமாந்தர்கள்.
'பெண்மையை போற்றுவோம்'
'வாழ்க இவ்வையகம்'
Release date
Ebook: 7 September 2023
English
India