Step into an infinite world of stories
Short stories
“நந்தனார் தெரு” சிறுகதைத் தொகுப்பிற்குப் பிறகு, எனது இரண்டாவது தொகுதி இது. எத்தனை கதைகளை எழுதினாலும் சிறந்த கதைகளை எழுதுவிட்டோமா என்கிற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு முறையும் இதைவிட சிறந்த கதைகளை எழுத வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் மேலும் மேலும் வலுக்கிறது.
நம்மைச் சுற்றியுள்ள சமூக அவலத்திற்கு எதிராக புதிய சனநாயகப் பண்பாட்டுச் சூழல் நோக்கி எனது எழுத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்.
இத்தொகுப்பு வெளிவர பரந்துபட்டு பலர் உதவி இருக்கிறார்கள். 'நெம்புகோல்' தோழர்கள்: பேராசிரியர் கவிஞர் த. பழமலய், த. பாலு மற்றும் ம. சொக்கலிங்கம் ஆகியோரின் ஊக்கத்தையும் உதவியையும் இங்கு நான், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
முன்னுரை வழங்கிய தோழர்கள் செ. கணேசலிங்கன் பிரபஞ்சன், தொகுப்பு சிறப்புற வடிவமைத்துள்ள தோழர் ப. திருநாவுக்கரசு, உள்ளும் புறமும் அழகுற ஓவியம் வரைந்துள்ள ஓவியர்கள் திரு. விஸ்வம், திரு. மருது, திரு. வீர. சந்தானம் தமிழோசை அச்சகத்தார், நண்பர்கள் மற்றும் உங்களுக்கும் எனது தோழமை நன்றிகள்.
- விழி. பா. இதயவேந்தன்
Release date
Ebook: 18 December 2019
English
India