Step into an infinite world of stories
Fiction
ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்வுடன் தம் காதல் நிறைவேறாத ஒரு இணையின் கதை பின்னப்பட்டுள்ள கவிதை தான்” வேரைத் தேடி வந்த விழுதுகள்” என்னும் கவிதை.அக்கவிதையின் தலைப்பே கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.இது போல் பல் வேறு நிகழ்வுகளை, உணர்வுகளைக் கருவாகக் கொண்ட 25 கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கி உள்ளன.
கரம் நீட்டிக் கண்ணீரைத் துடைத்திடுவோம்”,”கடலி(னி)ள் மிதக்கும் ஈழம்”,”எரியும் ஆஸ்திரேலியக் காடுகள்” ஆகிய கவிதைகள் உலக நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகள்.நம்பிக்கை,வாழ்வின் நிதர்சனம்,அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் அவலம், தம் அடையாளத்தை இழந்த ஆதி குடி மக்கள்,உப்பகத் தொழிலாளர்களின் கண்ணீர்,விவசாயிகளால் போர்ச் சாலையான டில்லி தார்ச் சாலைகள்,தந்தை-மகன் இருவருக்கும் இடையே எற்படும் புரிதல் முழுமை அடைவதன் பரிணாமம்,உலகைத் தரிசிக்க திறந்து வைக்கப்படுகின்ற ஜன்னல் இன்னும் இவை போன்ற பல முக்கியமான உனர்வுகளைக் கருவாகக் கொண்ட கவிதைகள் பல் வேறு பாதைகளில் பயணிக்கின்றன. இத்தொகுப்பில். கவிதைகள் ஒவ்வொன்றும் சமுதாயத்தைக் காட்டிடும் விழியாக அமைந்து, வாழ்வின் சாரத்தை எடுத்தியம்பும் மொழிகளாக,கண்களில் கசிந்து சூடேற்றும் துளிகளாக விளங்குகின்றன.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India