Step into an infinite world of stories
Short stories
தமிழ்ச் சிறுகதைக்கு ஆழமும் அகலமுமிக்க நீண்ட வரலாறு ஒன்றுண்டு. சிறுகதை எத்தனை முறை எழுதப்பட்டாலும், படைப்பாளியிள் ஆற்றலுக்குச் சவால் விட்டு நிற்கும் கணங்கள் நிறைய உண்டு. படிக்கும் வாசகர்களாலும் மதிப்பிடும் திறனாய்வாளர்களாலும் மட்டுமின்றி பற்பல சந்தர்ப்பங்களில் சிறுகதைவாணர்களுக்கே இன்னும் திட்பநுட்பமுடன் கதையைப் படைத்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்படும்.
‘சிறகற்ற பறவைகள்’ சிறுகதையில் வரும் சம்மனசு மிக்கேல் படைப்புக்களில் பாத்திரப் படைப்புத் திறனும் பண்பு வெளிப்பாடும் நன்கு வெளிப்பட்டுள்ளன. ‘மழைக்குப் பின்னும் பூக்கள்’ சிறுகதையிலும் கதையில் நேரடியாக இடம்பெறாது. உரையாடல் மூலம் மட்டும் வெளிப்படும் எஸ்தரின் கணவன் படைப்பு மிக அருமையாக வெளிப்பட்டு உள்ளது. கதையின் தலைப்பு முதல் உரையாடல், எடுத்துரைத்தல் என்று அனைத்து நிலைகளிலும் புனைகதை மொழி கவிதையின் முழு வீச்சுடனும் பொருள் ஆழத்துடனும் வெளிப்பட்டுள்ளது. சிறுகதையின் கலை நுட்பங்களை அறிந்துகொண்டு நுணுக்கமும் செறிவுமிக்க கலை வடிவங்களாகக் கதைகளைக் கவிதை மொழியில் தரும் கார்த்திகா ராஜ்குமாரின் இந்த ‘விரித்ததோர் சாம்ராஜ்யத்தில்’ சிறுகதைத் தொகுப்பைத் தமிழ் வாசகர்களுக்கு அறிய செய்கின்றன.
Release date
Ebook: 11 January 2021
English
India