Step into an infinite world of stories
5
Biographies
ஹிந்து சமயத்தின் தத்துவங்களிலோ, சமய சிந்தனைகளிலோ, அல்லது தர்மநெறிகளிலோ என்றும் நிலைத்திருக்கின்ற மாபெரும் உண்மைகளெல்லாம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகாமுனிவர்கள் வழியாகத்தான் நம்மை வந்தடைந்துள்ளன. அந்த மகரிஷிகள் ‘தவம்’ என்றும் ‘யோகம்’ என்றும் அழைக்கப்படுகிற தங்களது தெய்வீக சக்திகள் மூலமாகப் புரிந்துகொண்ட உண்மைகளையே வேதங்கள் பதிவு செய்திருக்கின்றன. பல புராணங்களும் விவரிக்கின்ற - பலப்பல ஆண்டுகள் உணவின்றி மேற்கொள்ளப்பட்ட – ‘தவம்' என்பதே கூட அத்தகைய தெய்வீக சக்தியால்தான் என்பது கண்கூடு. என்றும் நிலைத்திருக்கும் வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பேருண்மைகளும் கோட்பாடுகளும் அந்த மகா முனிவர்களால் பரவலாக வெளியிடப்பட்டன. அவற்றின் மூலம் அந்த தெய்வீக சக்தியைக் குறித்து மனித இனம் அறிந்து கொண்டது. அத்தகைய மிக உயர்வான வேதகால முனிவர்களுள் ஒருவர் ‘யாக்ஞவல்கியர்'; முனிவர்களில் 'யோகீஸ்வரர்' என்றழைக்கப்பட்டவர் அவர் ஒருவரே; பாரதநாட்டின் மிகப்பழமையான வேதகால கலாச்சாரத்திற்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியதால் ‘யாக்ஞவல்கியரு’க்கு மிகச்சிறப்பான உயர்ந்த இடமுண்டு. வேதவியாசரை விடவும் மிக உயர்ந்த இடம் ‘யாக்ஞவல்கியருக்கு உண்டு, ஏனெனில், வேதங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள யாக்ஞவல்கியரின் கருத்துகளை வேதவியாசர் விளக்கிச் சொல்லியிருக்கிறார்.
அத்தனை தகவல்களும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ‘யாக்ஞவல்கியர்’ என்று இந்த நூலில் தரப்பட்டுள்ளது.
Release date
Ebook: 30 September 2020
English
India