Step into an infinite world of stories
6 of 10
Non-Fiction
சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.
இயற்கை எழில், வரலாற்று வாயில், சொல் விளக்கம், காரணப்பெயர்கள், மங்கையர் பூங்கா, குறுங்காவியம், அகத்துறை, நெய்த செய்திகள், காவியக் கடிதங்கள், விழாத விழாக்கள், எப்போதும் இருப்பவர்கள், துன்பத் துறைமுகம், இசை விருந்து, மொழிச்செல்வம், தேன் துளிகள், ஆராய்ச்சி என்ற 16 தலைப்புகளில் தேன் மழை என்ற நூலாக பல்விதமான பாடல்கள் சுவைபட அழகூட்டுகின்றன.
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368993652
Release date
Audiobook: 4 May 2023
English
India