Step into an infinite world of stories
Fiction
என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம். உங்களின் அன்பான ஆதரவினால் இதோ... 'பேசு... தென்றலே...' மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இதயத்தை நெகிழச் செய்யும் கதை இது.
குடும்பத்தலைவன் சரியில்லை என்றால் அந்த குடும்பமே சிதைந்து சிதறிப் போய்விடும்… என்பதை தான் இந்நாவலில் சொல்லியிருக்கிறேன்.
வேதனைகளையும், சோதனைகளையும், அவமானங்களையும் கண்டு பயந்துவிடாமல், அவைகளையெல்லாம் புன்னகையோடு ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு போராடும் 'சந்தியா'தான் இக்கதையின் நாயகி. மலர்களில் அபூர்வமான மலர் குறிஞ்சி. பெண்களில் அபூர்வமான பெண் சந்தியா. சுயநலமிக்க ஆனந்தன்... உழைத்து முன்னேறும் ரமணன்... இந்த இருவராலும் நேசிக்கப்பட்ட சந்தியா, கடைசியில் என்னவாகிறாள் என்பதை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
நாயகி சந்தியாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நாவலை வாசித்தபிறகும். வெகுகாலம் வரை உங்கள் இதயத்திற்குள்ளேயே இருக்கப் போகிறாள் இந்த சந்தியா.
குறிப்பிட்ட சில அத்தியாயங்களை எழுதுகிற போது எனது கண்கள் கலங்கியது: இதயம் விம்மியது. அதை நீங்களும் உணருங்கள். அவசியம் விமர்சனங்களை எழுதுங்கள்.
நன்றி! மீண்டும் சந்திப்போம்.
மகேஷ்வரன்.
Release date
Ebook: 5 February 2020
English
India