Step into an infinite world of stories
Fiction
'கிருதயுகம் எழுக மாதோ’ என்று அறைகூவல் விடுத்து, பாரதி கனவுகண்ட இன்றைய யுகத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே பாரதியுகத்தின் பிரஜைகள்தாம். வாராது வந்த மாமணியாய் சென்ற நூற்றாண்டில் நம் தமிழ்நாட்டில் தோன்றி, தமிழ்ச்சாதியையும் பாரத நாட்டையும் உய்விக்கவந்த மஹாகவியின் வழிவந்த நாம், அக்கவிக்கு பூசனை செய்ய கோடி கோடி மலர்களை தினம் தினம் அவன் பாதங்களில் அர்ப்பித்து வருகிறோம். ‘யதா சக்தி’ என்று அவரவர் சக்திக்கேற்ப அர்ப்பணம் செய்கிறோம். ‘நிதி மிகுந்தவர் பொற்குவை’ தருவதைப் போல சந்தானம் நாகராஜன் இந்த நூலை பாரதிக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார்.
"பாரதியின் பெருமை உலகமெங்கும் பரவ வேண்டும். அதற்கு நான் பயன்படவேண்டும். இது ஒன்றே என்னுடைய ஆசை” என்று சொன்னவர் பாரதியைப் பரப்புவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள். அவரைப் போன்றே எப்போதும் பாரதியின் சிந்தனைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவராக இருப்பவர் நாகராஜன் அவர்கள். ‘பாரதி ரத்தம்’ பாய்ந்த யாரும் எப்போதும் அவனைக் குறித்து பேசியும் எழுதியும் வருபவராகி விடுவார். அந்தவகையில் பாரதியைப் பற்றி பல நூல்களையும் எழுதி, உரைகளையும் நிகழ்த்தி வருபவர் தான் இந்நூலாசிரியர்.
ஆன்மீகம், தேசப்பற்று, மொழியறிவு, மொழிப்பற்று, புராண இதிகாசங்களின் ஈடுபாடு, வேத வேதாந்தங்களில் சூல்கொண்ட உண்மைகளின் உறவாடல் என்று பாரதி ஆழ்ந்து கற்று, கற்றதை கவிதையாய்ப் பொழியாத விஷயம் உண்டா? பாரதியைப் பற்றி எந்த கோணத்தில்தான் எழுதமுடியாது? ‘யாதுமாகி நிற்கின்ற’ அவனைப் பற்றி அதிகக் கோணங்களில் ஒரு நூல் எழுதவதும் அத்தனை எளிதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இந்த நூலில் பாரதி என்னும் சித்திரம் எப்படியெல்லாம் வரையப்பட்டிருக்கிறது என்று பார்ப்பதே ஓர் அனுபவம்.
Release date
Ebook: 20 July 2022
English
India