ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
மங்கை மோகத்தினால் மண்ணை இழக்கும் காவியக் கதையை விட்டு, மண் மோகத்தினால், காதலித்த மங்கையைத் துறக்கும் வாழ்க்கைக் கதையை எழுதவே சிந்தனை கிளர்ந்தெழுந்தது.
எனக்கு எப்போதுமே என் பாத்திரப் படைப்புக்களின் வாழ்க்கையில், அவர்களது ஆசைகளில், கனவுகளில், நம்பிக்கைகளில், சாதனைகளில், தவறுகளில், எல்லாவற்றிலுமே அநுதாபமும் அக்கறையும் உண்டு. அதனால் தான் என் நளினி, சுசீலா இருவருமே அநுதாபத்திற்குரிய பாத்திரங்களாக அமைந்து விட்டனர். என் கதாநாயகன் ரவிசந்திரனைப் பற்றியும் நீங்கள் குற்றம் காண மாட்டீர்கள். அவனிடம் எனக்கு உள்ள அநுதாபம் உங்களுக்கும் உண்டாகும்.
கோபாலபுரம் பண்ணை முதலாளி கோபாலரத்னம் சாமர்த்தியமாகத் தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார். அவரது பண்ணை மானேஜர் குமாரசாமி, எசமானர் சாதனைக்கு எதிராகத் தமது தோல்வியை மௌனமாகவே ஏற்றுக் கொண்டு விலகித் துன்புறுகிறார். ஆனால் கோபாலரத்னத்தின் மீது ஆத்திரம்கொள்ளத் தோன்றாது. குமாரசாமியிடம் ஒரு விதமாக இரக்கம் கொள்ளும் உள்ளம் கோபாலரத்னத்தின் மீதும் வேறுவிதமாக அநுதாபமே அடையும்.
மற்றும் இந்த நாவலில் வரும் மங்களம், பலராம், புவனேசுவரி, தண்டபாணி போன்றவர்கள் தனித்தனி இயல்பு உடையவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு குணம் காண்கிறோம் என்றால் உடனடியாகவே ஒரு குறையும் காண்கிறோம். குணத்தைக் கண்டு புகழவோ, குறையைக் கண்டு இகழவோ தோன்றாது. இரண்டையும் சீர் தூக்கி ஆராயும்போது அவர்களிடம் நமக்கு இரக்கமே ஏற்படும். அதில் தான் நமது மனித உள்ளத்தை நாம் உணரமுடிகிறது.
எல்லோருமே ஏதாவது தவறு செய்து விட்டுத் திண்டாடுகிறார்கள். அவர்களது தவறுகளை நாம் உணருகிறோம். நாம் கூட அந்த நிலையில் அப்படித்தானே தவறு செய்வோம் என்று நமக்குத் தோன்றுகிறது. இந்த எண்ணம் நமக்கு அவர்களிடம் இரக்கத்தை அளிக்கிறது.
முழுக்க முழுக்க மனித இயல்பை ஒட்டிய பாத்திரங்களுக்கு இடையே இரண்டு பேர் தமக்கென்று தனிப்பாதை வகுத்துக் கொண்டு வாழ்கின்றனர் இந்த நாவலில். தருமலக்ஷ்மியம்மாள் மக்கள் பணியே குறிக்கோளாகக் கொண்டவள். நாகராஜன் தியாகத்தின் சிகரத்தில் நிற்பவன். இவர்கள் இருவரும் இந்த நாவலில் இரண்டு இலட்சியங்களாக விளங்குகின்றனர்.
தவறு செய்வது மனித இயல்பு; அந்தத் தவறைத் தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வது மனிதத் தன்மை. காதல் ஒன்று; குறிக்கோள் மற்றொன்று. குறிக்கோளை நோக்கிச் சென்று வெற்றி பெறுவதற்குக் காதலைப் பலியிட வேண்டி வந்தால் - தவறுகள்...! தவறுகள்...!! தவறுகள்...!!! போராட்டம்...! போராட்டம்...!! போராட்டம்!!!
எல்லையற்ற போராட்டம். அந்தப் போராட்டத்தின் முடிவு தான் என்ன? இடையே கடமை உணர்ச்சி கூட மறந்து போகிறது. காதல் எப்படிப் போராடுகிறதோ, அப்படியேதான் வாழ்க்கையும் போராடுகிறது!
போதுமே! இதோ நாவல் பிறந்து விட்டது.
- பி. எம். கண்ணன்
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย