எனது சிறகுகள் முடமாக்கப்பட்டுவிட்டன. எல்லையற்ற வான்வெளியை என்னால் அளக்க முடியவில்லை. வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து ஏங்குகிறேன் எனக்கும் சிறகு முளைக்குமா என்று. மரணப்பறவை அடிக்கடி என் மனவானில் பறக்கிறது. அமைதியற்ற மனம் சஞ்சலப்படுகிறது. இந்த சிறைச்சாலையிலிருந்து வெளியேற வழியைத் தேடுகிறது. மரண தேவதையை அடிக்கடி என் வீட்டு வாசலில் பார்க்கிறேன். இந்த மரணப் புதைகுழியிலிருந்து விடுவிக்கும் சக்தி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. என்னை ஆட்டுவிப்பவன் சாத்தானைவிடக் கொடூரமானவனாகத்தான் இருக்க வேண்டும். இருள் கவிந்த பாதையில் ஒளியைத் தேடுவதாகத் தான் இருக்கிறது என் வாழ்க்கைப் பயணம். இளைப்பாறுதலுக்காக ஏங்க வேண்டியிருக்கிறது. நினைவுப்பறவை நான் சுமக்கும் சிலுவையில் வந்தமர்கிறது. பிதாவே என்னை ஏன் கைவிட்டீர் என்று வானத்தைப் பார்த்து நான் இறைஞ்சுகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 ธันวาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา