ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
நாதசுரத்தின் கம்பீரமும் இனிமையும் கலந்த ஓசை அந்தத் தெருவை நிறைத்தது. ஒளி விளக்குகளின் வண்ணங்களும் பன்னீர், சந்தனத்தின் மணமும் அந்த வீட்டை நிறைத்தன. நெஞ்சில் நிறைந்த பெண் சொந்தமாகப் போகிறாள் என்ற மகிழ்ச்சி மாப்பிள்ளையின் மனதை நிறைத்தது. வினயாவின் புகைப்படத்தைப் பார்த்தபோதே சந்தானம் அது தான் மாப்பிள்ளை மயங்கி விட்டான், லேசாகக் குனிந்த முகம். அதில் விழிகள் மட்டும் சற்று மேல்நோக்கிப் பார்ப்பதுபோல் அந்தப் படம் எடுக்கப்பட்டு இருந்தது. கறுத்து அடர்ந்த நீண்ட இமைகள், மீன் விழிகள். அந்த விரிந்த விழிகளுக்குள் தான் சங்கமம் ஆகிவிட்டாற்போல சந்தானம் உணர்ந்தான். அவளை நேரில் பார்த்து விழி மனம் துடித்தது. அவளுடைய தந்தையின் சம்மதம் கிடைத்தது. அவள் அறியாமலே அவளது கல்லூரியிலேயே அவளை நேரில் பார்த்தான். சற்று அதிகமான மெலிவு தான். ஆயினும் வெகு ஒழுங்கான உடலமைப்பு. யாரோ ஒரு தோழியுடன் பேசிக் கொண்டு சென்றவள், தன் போக்கில் இவனைவும் பார்த்துவிட்டுப் போனாள். அவ்வளவு தான், அந்த விழிகளும், கமாட்டன்ன இதழ்களும் விரித்த வலையில் இருந்து சந்தானம் மீளவே இல்லை. திடீரென்று திருமணப் பேச்சு தயங்கி நின்றது. வினயாவின் தாயாருக்கு உடல் நலம் மிகவும் மோசம் என்றார்கள். சந்தானத்தின் தாயாருக்கும் அவ்வளவு விருப்பம் இல்லை. நோயாளியின் மகளைக் கட்டினால் மகனுக்கு மாப்பிள்ளைச் சோறு வகையாகக் கிடைக்காதாம். இங்கும் அங்குமாகத் தயங்கவே சந்தானம் பதறிப் போனான். தாயிடம் வாதாடிச் சம்மதிக்க வைத்தான். சமயத்தில் வினயாவின் அன்னையும் அவனுக்கு உதவியாக வந்தார். மகளது திருமணத்தை விரைவில் காண வேண்டும் என்று உறுதியாகக் கூறி விட்டாராம். எல்லாம் சேர்ந்து பத்து நாட்களுக்குள் திருமணம் நிச்சயமாக இன்று நடந்தேறிக் கொண்டும் இருந்தது. “பெண்ணை அழைத்து வாருங்கள்” என்றார், புரோகிதர்.
நண்பர்களின் கேலியைப் பொருட்படுத்தாமல் சந்தானம் ஆவலுடன் நோக்கினான். அவனுடைய விழிகளுக்கு விருந்தாக வினயா வந்து கொண்டு இருந்தாள். மாலைகளின் கனத்தைத் தாங்க இயலாது துவளும் கொடியுடல், செவ்வாழை மலர்போலத் தரையை நோக்கிய முகம், பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. அய்யர் கூறிய மந்திரங்கள் எங்கோ வெகு தூரத்தில் ஒலித்தன. பட்டாடையின் உரசலோடு அவள் தன் அருகில் இருப்பதே சந்தானத்துக்கு மயக்கம் தந்தது, மங்கல நாணைக் கையில் கொடுத்த பிறகு தான் தன் நினைவு வந்தது. நாண் பூட்டும் சாக்கில் அவள் முகத்தை ஒரு முறை நன்கு பார்த்து விட முயன்றான். அவளோ முன்னிலும் அதிகமாகக் குனிந்து விட்டாள். தலையில் இருந்த நெற்றிச் சுட்டியும் சூரிய-சந்திர பிரபைகளும் தான் பார்வைக்குத் தெரிந்தன. “பெரியவெட்கம்! சற்று நிமிர்ந்தால் என்னவாம்?” என்று சந்தானம் மனத்தோடு சிணுங்கினான். வினயாவின் சிறிய தந்தையும், சிற்றன்னையும் அவளைத் தாரை வார்த்து அளித்தனர். அதுவும் அவன் மனதில் பதியவில்லை.தன் வலிய கையுள் அடங்கிய வினயாவின் பஞ்சன்ன கரத்தின் மென்மையை சுவைத்துக் கொண்டு இருந்தான். மாலைகளின் மறைவில் அவள் கையில் லேசாகக் குறு குறுப்பு மூட்டினான். அவள் அசைந்தால் அல்லவோ? ‘மண்ணாந்தை’ என்று மனதிற்குள் செல்லமாக வைத்தான். திருமணச் சடங்குகள் எல்லாம் இனிதே நிறைவேறின. மணமக்கள பெரியோரைப் பணிந்து எழுந்தனர்... படுக்கையில் இருந்த வினயாவின் தாயைப் பணிய உள்ளே சென்றனர். கட்டிலில் அவரைக் கண்டதும் சந்தானம் திடுக்கிட்டுப் போனான். இவ்வளவு மோசமாகவா இருக்கிறது அவரது உடல் நிலை! சட்டென மனைவியின் புறம் திரும்பினான். அவள் முகம் வேறுபக்கம் திரும்பி பிருந்தது கண்ணீர் விடுகிறாளோ? அவளை அணைத்து ஆறுதல் கூற மனம் துடித்தது. அதற்கு இது இடமும் அல்ல நேரமும் அல்ல. மனதை அடக்கிக் கொண்டான். தாயையும் மகளையும் தனியே விட்டு அகன்றான்
© 2025 PublishDrive (อีบุ๊ก): 6610000859986
วันเปิดตัว
อีบุ๊ก: 23 พฤษภาคม 2568
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย
