Step into an infinite world of stories
Fiction
பத்ரிக்கு கம்ப்யூட்டரில் அந்த நாலு நாட்களும் முக்கியமான சார்ட் ஒன்றைத் தயாரிக்க வேண்டி இருந்தது. அது சற்றே கடினமான வேலை!
காலை ஆறு மணிக்குப் போனால், இரவு பத்தரையாகும் வீடு திரும்ப. பேருக்கு சாப்பிட்டு விட்டு படுத்து விடுவான். நாலு நாட்கள் எந்திர கதியில் உழைத்து சார்ட்டை முடித்து விட்டான். எம்.டி.யிடம் கொண்டு வந்து தந்தான்.
“முடிச்சாச்சா?”
“ஆச்சு சார்!”
“மைகாட். பதினைஞ்சு நாள்ள செய்ய வேண்டிய வேலையை நாலுநாள்ள முடிச்சிட்டீங்களா? வொண்டர்! இது நம்ம கம்பெனிக்குப் பெரிய பிஸினஸ். போட்டிக் கம்பெனிகள் நாலஞ்சு சார்ட் தயாரிச்சிட்டு இருக்காங்க. வேற யாரும் இத்தனை வேகமா செஞ்சிருக்க மாட்டாங்கனு நினைக்கிறேன்! எனிவே, சப்மிட் பண்ணிக்றேன் இன்னிக்கே!”
மறுநாள் ஞாயிறு!
பத்ரி வீட்டில் நன்றாக உறங்கினான்.
எழுந்து குளித்துவிட்டு சாப்பிட வந்தான்.
“உட்காரு பத்ரி பேசலாம்!”
“என்னக்கா? கடன் சங்கதி எப்படி இருக்கு?”
“பத்து சதவிதம் வட்டினு ஒண்ணரை லட்சம் தர ஒரு பார்ட்டியை எங்க ஜியெம் புடிச்சுத் தந்திருக்கார். ரொம்பக் குறைஞ்ச வட்டி. மாசம் ஆயிரத்து முன்னூறு ரூபா போகும்! தவிர என்னோட லோன்கள் மூலமா ரெண்டாயிரம் போகும். ஒரு ஃபைனல் வித்ட்ராயலும் போட்டுத் தர்றேன்!”
“அவங்களைக் கேக்காம போடலாமாக்கா?”
“நான் போட்டிருக்கேன்னு தெரியுமா அவங்களுக்கு? கூடப்பிறந்தவனுக்கு இதுகூடச் செய்யலைனா எப்படி பத்ரி?”
“சரி! விஷயத்துக்கு வா!”
“நீ மாசம் மூவாயிரத்து முன்னூறு ரூபா கடன் அடைக்கணும்! உன் கையில பிடித்தம் போக நாலாயிரத்து எண்ணூறு ரூபா வருது! மீதி ஆயிரத்து நூறுல, ஆயிரம் ரூபா வாடகையும் தந்துட்டா, நீயும் அம்மாவும் என்ன செய்வீங்க? மண்ணையா தின்ன முடியும்?”
“அதுகூட நல்ல ஐடியாக்கா!”
“பத்ரி நான் சீரியஸா பேசறேன்!”
“ஏற்பாடு பண்ணுக்கா! இப்ப பணம் நமக்கு முக்கியம்! உன் கல்யாணம் நடக்கணும்! நாங்க சமாளிச்சிப்போம்! தேதி குறிக்கச் சொல்லும்மா!”
“பத்ரி. எனக்கு பயம்மா இருக்குடா!”
“வாழ்க்கைனா, எல்லாமே ரிஸ்க்தான்கா! எங்களுக்காக உழைச்ச உனக்காக நாங்க ஒரு வேளையோ, ரெண்டு வேளையோ பட்னி கிடந்தாக்கூட தப்பில்லைக்கா! உனக்கொரு வாழ்க்கை வருது பாரு!”
சாவித்ரியின் கண்கள் தளும்பியது.
© 2024 Pocket Books (Ebook): 6610000522729
Release date
Ebook: 3 February 2024
English
India
