Step into an infinite world of stories
அண்ணா 1945ல் எழுதிய புதினம் தசாவதாரம்.
தங்கையின் சாதி மீறிய திருமணம், அண்ணனின் ஆணவப் பழிதீர்க்கும் முயற்சி, கோவில் நகைக் கொள்ளை, போலி வழக்கும் சிறை வைப்பும், போட்டி பொறாமையின் திருவிளையாடல்கள், வக்கீல்களின் நேர்மையும் அயோக்கியத்தனமும், சில்லறைத் திருடர்கள், போக்கிரி போலீஸ்காரன், போலீஸ் இன்ஸ்பெக்டரின் திறமையான நடவடிக்கை, சமூகத்தின் இரட்டை மனப்போக்கு, பாதிக்கப்பட்ட அபலையின் துணிச்சல், கும்பல் மனோதத்துவம், பத்திரிகை தர்மமும் அதர்மமும், சிறையில் இருப்போரின் அசல் முகங்கள், ஜமீன்தாரர்களின் களியாட்டங்கள், நடிகைகளின் கவர்ச்சியும் அதற்குப் பின்னிருக்கும் ஏக்கங்களும் அவலங்களும் என்றிவ்வாறு இன்றளவும் தொடரும் சமுதாயத்தின் இயல்புகளைப் படம் பிடித்துத் தோலுரிக்கிறார் அண்ணா.
ரமணியின் நேர்த்தியான படிப்பில் கேளுங்கள்...
© 2023 Ramani Audio Books (Audiobook): 9798368963112
Release date
Audiobook: 13 July 2023
English
India