Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036
Cover for மயங்குகிறாள் ஒரு மாது

மயங்குகிறாள் ஒரு மாது

Language
Tamil
Format
Category

Fiction

“இதிலே ஐயாயிரம் இருக்கு. விஜய்க்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டு, டியூசனுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க சார். டென்த் எக்ஸாம் எழுத நான் நல்ல மார்க் எடுக்கணும். சயின்ஸ்தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதா நினைக்கிறான்” “உங்களோட அன்பான கவனிப்பில் அருணும், விஜய்யும் நல்லா படிக்கிறாங்க. நீங்க சொன்ன மாதிரியே ஏற்பாடு பண்றேன். அப்புறம் சொல்லுங்க சார். பிள்ளைகளை பார்த்தாச்சா” “இல்லை. இனிமேதான் போகணும். அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு நேரா இங்கே நுழைஞ்சிட்டேன்” சரி போய் பாருங்க, ஆபிஸ் ரூமை விட்டு வெளியே வருகிறார் குருநாதன். பிள்ளைகள் அங்கிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்க, அவர்களை தாண்டி விசிட்டர் ஹாலுக்கு வருகிறார். “சார் வாங்க” அங்கிருக்கும் கண்காணிப்பாளர் குருநாதனை வரவேற்க, “உங்க பிள்ளைகளை பார்க்க வந்திங்களா, இப்பதான் காபி குடிச்சுட்டு, ரூமுக்கு போனாங்க. இருங்க வரச் சொல்றேன்” சிறிது நேரத்தில் இருவரும் அவரை நோக்கி வேகமாக வருகிறார்கள். “அப்பா” ஆளுக்கொரு பக்கம் அன்போடு பற்றிக்கொள்ள, “என்னப்பா, எப்படியிருக்கீங்க?” “நாங்க நல்லா இருக்கோம். அக்காவெல்லாம் வரலையா?”அருணா செமஸ்டர் எக்ஸாம். கல்பனாவுக்கு வேலை சரியா இருக்கு. நான்தான் பத்து நாளாச்சேன்னு புறப்பட்டு வந்தேன்” “வாங்கய்யா மரத்தடியில் போய் உட்கார்ந்து பேசுவவோம்” அருண் சொல்ல. “இந்தாப்பா இதிலே பால்கோவா இருக்கு. உங்க ப்ரெண்ட்ஸ்க்கு கொடுத்துட்டு சாப்பிடுங்க. கொண்டு போய் ரூமில் வச்சுட்டுவா அருண். நான் விஜய்யோடு வேப்பமரத்தடியில் உட்கார்ந்திருக்கேன்” சொன்னவர், விஜய்யுடன் நடக்கிறார். மரத்தை சுற்றி வட்டமாக கட்டப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் அமர்ந்தவர், “விஜய், இந்த வருஷம் பத்தாவது. படிப்பில் அதிக கவனம் இருக்கணும். நீ இஷ்டப்பட்டபடி மெக்கானிக் லயனில் நல்லபடியா படிச்சு, பெரிய ஆளாக வரணும். ஒரு இலக்கை நோக்கி வரும்போது நம் கவனத்தை சிதற விடக்கூடாது” “அப்பா, நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணினவன். பெத்தவங்க யாருன்னு தெரியாத எனக்கு, ஒரு அன்பான குடும்பம் கிடைச்சிருக்கு அக்காவும், நீங்களும் என் மேல் காட்டற அன்புக்கு என்னைக்கும் கட்டுப்பட்டவனாக இருப்பேன். நல்லா படிக்கிறேன்பா. நீங்க பாராட்டற அளவுக்கு நல்ல மார்க் எடுப்பேன்” அருண் அவர்களை நோக்கி ஓடிவர, “பார்த்து அருண். எதுக்கு இப்படி அவசரமா ஓடிவரே” மூச்சிறைக்க அருகில் வந்தவன் “அப்பா நீங்க எங்ககூட இருக்கிற இந்த கொஞ்ச நேரமும், உங்க பக்கத்திலேயே இருக்கணும். அதுக்காகதான்” அன்பை கண்களில் தேக்கி பார்க்கும் அவனை தழுவிக்கொள்கிறார். “அருண், விஜய் நான் உங்களுக்கு சொல்றதெல்லாம் இதுதான். கடவுள் படைப்பில் எத்தனையோ வினோதங்கள் அன்புக்கு ஏங்கற குழந்தைகள். பிள்ளைகளின் பாசம் கிடைக்காமல் வருந்தும் வயதானவர்கள்கை, கால் இல்லாமல் சிரமப்படும் மனிதர்கள், வறுமையில் வாடும் குடும்பங்கள், இப்படி எத்தனையோ இருக்கு. நமக்கு இதிலே கிடைச்சிருக்கிற நல்லதை பார்க்கற பக்குவத்தை வளர்த்துக்கணும். உங்க பிறப்பு பரிதாபத்துக்குரியதாக இருக்கலாம். என் மூலமா கடவுள் உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை காண்பிச்சுருக்காரு. உங்களுக்கு அப்பா, இரண்டு அக்கா, உங்க நலனில் அக்கறை காட்ட இருக்கிறோம். அதனால எப்போதும் மனசை தளரவிடாம சந்தோஷமா இருக்கணும். நல்லா படிக்கணும். அடுத்தவங்ககிட்டே அன்பு பாராட்டற நல்ல மனசு இருக்கணும். நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில் உயர்ந்து சந்தோஷமா இருக்கிறதை இந்த அப்பா பார்க்கணும், செய்வீங்களா?” “நிச்சயம்பா. உங்க சொல் எங்களுக்கு வேதவாக்கு. நல்லா படிப்போம். எங்களை பத்தி கவலைப்படாதீங்க” விஜய் சொல்ல, “அப்பா, பிரஷர் இருக்குன்னு சொன்னீங்களே, ஒழுங்கா மருந்து, மாத்திரை சாப்பிடறீங்களா? டாக்டர்கிட்ட செக் அப்புக்கு போனீங்களா?” “இல்லப்பா... போகணும்” “என்னப்பா இது. நீங்க உடம்பை பார்த்துக்கணும். நீங்க நல்லா இருந்தாதான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். இனிமே தனியே வராதீங்க. அக்காவோடு வாங்க. வரமுடியலைன்னா போனில் பேசுங்கப்பா போதும்” “நீங்க முந்தி மாதிரி இல்ல. இளைச்சு போயிட்டீங்க” கவலையாய் பேசும் அருணை அன்புடன் பார்க்கிறார்

© 2024 Pocket Books (Ebook): 6610000531264

Release date

Ebook: 12 February 2024