Step into an infinite world of stories
ஔவையின் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான நூல்கள் வெளிவந்துள்ளன. ஆத்திசூடி கதைகள், ஆத்திசூடி பாடல்கள், ஆத்திசூடி கட்டுரைகள் என்று பல பரிணாமங்களில் பல நூல்கள் வெளிவந்துள்ளதைப் போன்று ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்டு நாடக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதே இந்த ‘ஆத்திசூடி நாடகங்கள்' என்ற இந்நூல். இதன் ஆசிரியர் திரு. அவர்கள்.
அறம் செய விரும்பு' முதல் 'அஃகஞ் சுருக்கேல்' வரை உள்ள பதிமூன்று ஆத்திசூடிகளுக்கும் பதிமூன்று நாடகங்களை உருவாக்கி உள்ளார் இந்நூலாசிரியர். நாடகங்கள் ஒவ்வொன்றும் சிறுவர்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய மாணவ சமூகத்தினர் படித்து பயனையும், பண்பையும் பெறும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாடகத்தையும் அதன் கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் ஆத்திசூடி பாடல் கருத்துக்கு ஏற்றாற்போல் திறம்பட வடிவமைத்துள்ள இந்நூலாசிரியரின் போக்கு போற்றுதற்குரியது. அனைவரும் இந்நூலினை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
நன்றி!
Release date
Ebook: 10 December 2020
English
India