Step into an infinite world of stories
Fiction
"அம்மாவின் வரவு " என்ற சிறுகதை நுட்பமான உணர்வை வெளிப்படுத்துகிறது. வாழ்க்கை யாருக்கு வரமாக அமைகிறது? எல்லாம் சாபம் என்பது போல்தான் நிகழ்வுகள் நடக்கிறது. எளிய குடும்பம், வறுமை, கல்வி கற்கவே வசதியற்ற பிரச்சனையென களம் விரிகிறது.
நாயகன் காத்திருப்பது போலவே நாமும் காத்திருக்கத் துவங்குகிறோம். இதுதான் கதையின் பலமாகவும் அமைகிறது. "மேஸ்திரி' என்ற கதை எத்தனை இடர்கள் வரினும், எத்தனை தடைகள் இலக்கைத் தடுத்தாலும் காலம் ஒரு நாள் பரிசுக்கோப்பையைத் தருமென்பதைக் கூறும் சிறந்த சிறுகதை.
இப்படி கதைகள் தோறும் பயணிக்கிற போது கதையாசிரியரின் உலகம் விரிந்து விரிந்து எல்லையற்றதாகிறதுநிறைவேறாத ஆசைகள், உண்மையும், பொய்யும் தன்னைத்தானே ஆய்வுக்குட்படுத்திக் கொள்கிற குணம். உண்மையான காதல் உணர்த்தும் உளவியல், சமூகத்திற்கு எது தேவை, எது தேவையில்லையென்கிற பக்குவம் என கதைகள் பரந்த தளத்தில் விரிந்துள்ளது.
நேர்மையோடு வாழ்கிறவர்களை எப்போதும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றே முத்திரை குத்துகிறவர்களும் அந்த உழைப்பைப் புரிந்து கொள்கிற நம்பிக்கையென கதைகள் வாழ்வியலின் பக்கங்களை அடையாளப்படுத்துகிறது. பல்வேறு தேர்வுகள் இன்றைய மாணவர்களின் மனநிலையை எவ்வாறு சிதைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளச் சின்னஞ் சிறுகதையும் தொகுப்பில் உண்டு.
இக்கதைகளில் சமூகம் சார்ந்த கோபங்கள், தனிமனிதத் துயரங்களென யாவும் உண்டு. இக்கதைகளை வாசிக்கிற வேளையில் நமக்குள் இச்சமூகம் குறித்தான சில வினாக்கள் எழுவது உறுதி.
Release date
Ebook: 28 March 2025
Tags
English
India