Step into an infinite world of stories
Personal Development
உலகில் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ விரும்பாதோர் யாருமில்லை ஆனால் அன்றாட வாழ்விலோ பல நோய்நொடிகள் நம்மைப் பீடிக்க நாம் நொந்து போகிறோம். ஆகவே இந்த நிலையில் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.
நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. இவை பற்றியும் அறிந்து கொண்டால் தான் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.
தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இயற்கையான எளிய வழிகள், ஆரோக்கிய வாழ்வுக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை நெல்லிக்காய், விந்தணு எண்ணிக்கை குறைபாடு பற்றிய கேள்வி-பதில்கள், நரைமுடியைக் கறுப்பாக்கும் இரசாயன டையின் அபாயம், பளபளப்பான கேசம் பெற எளிய குறிப்புகள், என்றும் இளமையோடு இருக்க வழிகள், டயாபடீஸ் பற்றிய அடிப்படை உண்மைகள் ஆகியவை பற்றிப் பல்வேறு அரிய செய்திகளை இந்த இரண்டாம் பாகத்தில் படித்து மகிழலாம்; அவற்றில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கலாம். அனைவருக்குமான நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்த நூல் இது.
Release date
Ebook: 7 March 2025
Tags
English
India