Step into an infinite world of stories
Religion & Spirituality
ஆந்திரம், தெலுங்கானாவில் புகழ்பெற்ற கோவில்கள் - முதல் பாகம் என்ற தலைப்பில் வெளியாகும் இந்த நூலில் 32 தலைப்புகளில் ஏராளமான கோவில்களின் விவரங்களைத் தந்துள்ளேன். ஹைதராபாத் போன்ற இடங்களில் இருபதுக்கும் மேலான கோவில்கள் உள்ளன. ஆலம்பூர் முதலிய ஊர்களில் ஒன்பது அல்லது பத்து கோவில்கள் உள்ளன.
திருப்பதி, காளஹஸ்தி முதல் வட கோடியிலுள்ள மந்த்ராலயம் ராகவேந்திரா மடம் வரை சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆயினும் புஸ்தகத்திலுள்ள பல கோவில்களை யூடியூப் மூலம் பார்த்துத்தான் எழுதினேன். லட்சத்துக்கும் மேலான சிறிய பெரிய கோவில்கள் உள்ள பாரத புண்ய பூமியில் எவருமே எல்லாக் கோவில்களையும் தரிசிக்க முடியாது; பல பிறவிகள் எடுத்தால்தான் இது சாத்தியம் ஆகும். பல கோவில்களிலுள்ள கலை, கட்டிட, சிற்ப அதிசயங்களையும் மூர்த்தி விசேஷங்களையும் படித்தால் கூட நாம் நேரில் கண்ட புண்யம் கிடைத்துவிடும். அவைகளை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற உந்துதலும் எப்போதும் மனதில் இருக்கும்.
Release date
Ebook: 30 August 2025
English
India
