Step into an infinite world of stories
Fiction
குவைத்தில் உள்ள மூன்று லட்ச இந்தியர்களில் ஒரு லட்சம் பேர் வீட்டுப் பணிக்காக உள்ளவர்கள். இதில் 30 ஆயிரம் பணிப்பெண்கள்! குவைத் இந்திய தூதரகத்திற்கு பாதிக்கப்பட்டு தினம் குறைந்தது மூன்று பெண்களாவது. அடைக்கலம் தேடி ஓடி வருகின்றனர்.
ஒவ்வொருவருக்குப் பின்னிலும் பலவித சோக சம்பவங்கள்! (பணிப்பெண்களை பராமரித்து, அவர்களைத் திரும்ப பத்திரமாய் ஊருக்கு அனுப்ப வேண்டி இந்திய தூதரகம் தனி பங்களா எடுத்து பராமரித்து வருகிறது). என்ன தான் சட்டத்திட்டங்கள் கடுமை என்றாலும், அதையும் மீறி அத்து மீறல்களும், அவலங்களும் இருப்பது சங்கடமான ஒன்று.
அபலைப் பெண்களின் கண்களைத் திறக்கும் பொருட்டு இந்த நாவலை அர்ப்பணித்து எழுத ஆரம்பித்தேன். இருபது வாரங்கள் என்பது பிளான். இடையில் பல விஷயங்களையும் சொல்ல வேண்டும் என்று முயற்சித்த போது
கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறியும் அபாயம் தெரியவே, பல உண்மைகளையும் பாலிஷ் பண்ண வேண்டியதாயிற்று. தொடரின் நோக்கம் கதை எனும் சுவாரஸ்யத்தைவிட ‘சமூக கண்ணோட்டம்’ எனும் வெளிப்பாடுதான் என்பதால் சந்தர்ப்பம் கிடைக்குமிடங்களிலெல்லாம் திணிக்க முடிந்தது. வாரமலரின் பொறுப்பாசிரியர் கூட, “மற்ற தொடர்களைவிட இந்தத் தொடருக்கு அதிக வரவேற்பு” என்று என்னிடம் தெரிவித்தபோது கூட எனக்கு ஆச்சர்யம். பாதிக்கப்படும் பெண்கள் ஏராளம் அவர்களுக்கு இது மருந்தாக அமைந்திருக்கிறது என்பதை அறியும்போது திருப்தி. வெறும் கற்பனை கதை தான் நோக்கம் என்றால் திருப்பங்கள் விறுவிறுப்பு வேகமான ஓட்டம் எனத்தரலாம். கதையோடு ஒரு சமூக பிரச்சினை என்கிற போது இங்கே விஷயம்தான் பிரதானம்.
ஆகையால், வழக்கமான விறுவிறுப்பான உண்மைக் கதைகளை எதிர்பார்க்கும் எனது வாசகர்களுக்கு சற்று ஏமாற்றமாயிருந்திருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் பாதிக்கப்படும் அப்பாவி பெண்களுக்கும், பாமர மக்களுக்கும் ஒரு ‘ஒளி விளக்காக’ இத்தொடர் அமைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. எனது நோக்கமும் அதுதான்.
அன்புடன்,
என். சி. மோகன்தாஸ்
Release date
Ebook: 18 May 2020
English
India