Step into an infinite world of stories
கல்லூரி மாணவியான நித்யாவை சக மாணவன் விக்னேஷ் விடாமல் துரத்தி தன் காதலைச் சொல்லுகிறான். தான் ஏற்கனவே நரேனைக் காதலித்துக் கொண்டிருப்பதை அவள் சொல்லியும் விடாமல் நச்சரிக்கிறான்.
ஒரு கட்டத்தில் அந்த விக்னேஷ் கல்லூரியில் வைத்த எல்லோர் முன்னிலையிலும் நித்யாவிற்குத் தாலி கட்டி விடுகிறான். காதலன் நரேனிடம் விஷயத்தைச் சொல்ல, அவன் கழற்றி எறியச் சொல்கிறான். தமிழ்ப் பெண்ணான நித்யா தாலி கழற்றி எறிய மனம் வராமல், என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறாள்.
கோபம் கொண்ட நரேன் அவளைப் பிரிந்து, படிப்பையும் விட்டு விட்டு சொந்த ஊருக்கே செல்கிறான்.
காதலித்தவனையும் பிரிய முடியாமல், கட்டாயத் தாலி கட்டியவனுடன் செல்லவும் மனமில்லாமல் தவித்த நித்யா...
தன் காதலனுடன் சேர்ந்தாளா...? தாலி கட்டியவுடன் வாழந்தாளா...?
என்னும் முடிச்சினை சுவாரஸியமாய் அவிழ்த்து, நல்லதொரு முடிவை அளித்துள்ளார் கதாசிரியர்.
Release date
Ebook: 5 February 2020
English
India