Step into an infinite world of stories
Religion & Spirituality
ஹிந்து மதத்தில் அத்வைதம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல இரகசியங்களை விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்வதற்கு சரியான விளக்க நூல்கள் தேவை. பிறவி ஏன், முக்தி எப்போது, புண்ணிய பாவ கர்மங்களை எப்படிப் புரிந்து கொள்வது, பதினாறு ராக த்வேஷாதிகள் யாவை, ஞானத்தின் வகைகள் என்னென்ன, ஒரு ஜீவனுக்கு மூன்று தேகங்களினால் பயன் என்ன, லக்ஷணா விருத்தி, பிராணன், மனம், புத்தி, சித் ரூபம், ஆனந்த ரூபம், கோசம், ஆத்மா சித் ரூபன், பரிச்சேதம், வஸ்துக்கள், ஆனந்தத்துவம் ஆகியவற்றின் விளக்கத்தை இந்த நூலில் காணலாம்.
புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான விஷயங்களாக இருப்பதால் இவற்றை சிரத்தையுடனும் பொறுமையுடனும் ஆழ்ந்து ஊன்றிப் பல முறை படித்தல் அவசியம். வேதாந்த விசாரத்தில் ஆர்வம் உடையவர்களுக்கான நூல் இது.
அடுத்து பாரதத்தில் ஆன்மீக எழுச்சி ஏற்படுத்திய அவதார புருஷரான ஆதி சங்கரர் இயற்றி அருளிய கணக்கற்ற நூல்களில முக்கிய நூல்களான பஜகோவிந்தம், சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரீ, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், ப்ரச்நோத்தர ரத்நமாலிகா, ஸ்ரீ ஷட்பதி ஸ்தோத்ரம், கனகதாரா ஸ்தோத்ரம் ஆகியவற்றின் அறிமுகத்தையும் இந்த நூலில் காணலாம்.
அத்வைதம் பற்றியும் ஆதி சங்கரர் நூல்கள் பற்றியும் அறிய விரும்புபவர்களுக்கு உதவுகின்ற நூல் இது.
Release date
Ebook: 6 March 2025
No Reviews Yet
Download the App to Join the Conversation and Add Reviews.
English
India