Step into an infinite world of stories
Biographies
ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியாக 51 கவிஞர்கள் இயற்றியுள்ள ஓராயிரம் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. இவை மூன்று பாகங்களாக வெளியிடப்படுகிறது. இந்த முதல் பாகத்தில் 22 கவிஞர்கள் பாடிய 254 பாடல்கள் இடம் பெறுகின்றன.
திருவாளர்கள் வி.ஜி.சீனிவாசன், இரகுபதி சாமிநாதன், இரா. இளங்குமரன், கலைமோகன், மு. சதாசிவம், கா. தேவராசக்கனி, சூ. கிரிதரன்,ம.க.சிவசுப்பிரமணியன், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அழ.வள்ளியப்பா, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கண்ணதாசன், பண்டித ஜனாப் K. அப்துல் சுகூர் நா.சீ. வரதராஜன், சங்கு கணேசன், மதிவண்ணன், ஆர்.பி.சாரதி, கவிஞர் தமிழழகன், கவிஞர் K.ராமமூர்த்தி, திருமதி சௌந்தரா கைலாசம் ஆகியோரது படைப்புகள் இந்த பாகத்தில் இடம் பெற்றுள்ளன.
பாரதியாரின் கவிதையில் உள்ள நுட்பமான விஷயங்களை இந்தக் கவிதைகளில் காணலாம். அத்தோடு கவிஞனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் அறியலாம். பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய கவிதைகள் இவை. அனைவருக்கும் பரிசாகக் கொடுக்க உகந்த நூல் இது.
Release date
Ebook: 19 March 2025
English
India